92. மகத்துவமும் நீதியும்

1. மகத்துவமும் நீதியும்
மா கிருபையுமான
உன்னதமான தேவனும்
ரட்சிக்கப் பலமான
பராபரனுமாங் கர்த்தா
ஓர் வஸ்துவும் மூன்றாளும்
இதைத் தாம் தான் வெளிப்படப்
பண்ணா விட்டால், ஓர்க்காலும்
மனோவாக்குக் கெட்டாது.

2. பரத்தில் தங்கி நீதியர்
சபையிலும் உலாவி,
எங்குமிருக்கிற இவர்
பிதா குமாரன் ஆவி.
இப்பரிசுத்த நாமமாய்
விளங்கிய அன்புள்ள
த்ரியேகர் கோடா கோடியாய்
இருக்குமெங்குமுள்ள
சேனைகளுக்குங் கர்த்தர்.

3. அனாதியாய்ப் பிதாவிலே
குமாரனார் பிறந்தார்;
இவ்வுலகத்தில் இவரே
நரரை மீட்க வந்தார்.
இருவராலும் ஆவியார்
பளிங்குக்கு ஒப்பான
ஆறாய்ப் புறப்டுகிறார்.
இம்மூவர் ஏகமான
மகத்துவமுடையோர்.

4. இதோ, நெஞ்சை, உன்னுடைய
கதி இக்கர்த்தர்தானே.
உன் வாழ்வைக் கவனிக்கிற
உன் நேசர் தம்பிரானே.
பார், உன்னை உண்டு பண்ணினார்,
உன் பாவத்தைச் சுமந்தார்.
மோட்சவழியைக்காண்பித்தார்
இரக்கஞ் செய்துவந்தார்;
முடியவும் ரட்சிப்பார்.

5. நீ அவரண்டை அவரை
நன்றாய் அறிய ஏறு,
அவருடைய தயவை
ருசிக்கக் கிட்டிச் சேரு
திடனுந் தெய்வநேசமும்
பரகரக்குப் போக
விருப்பமும் அத்தால் வரும்.
ஆ, அந்தப் பரலோக
மோட்சானந்தத்தைத் தேடு.

6. ஆனாலும் லோக ஆசையால்
கர்த்தாவை விட்டு விட்டு,
தன் மனக்கடினத்தினால்
பிசாசைத் தண்டனிட்டுப்
பின்பற்றுஞ் சேனைக்கு ஐயோ;
அக்குருடர் எண்ணாத
கர்த்தா வெளிப்படும் அப்போ
ரட்சிப்பில் பங்கில்லாத
துன்மார்க்கராய்த் தள்ளுண்டோர்.

7. ஆ, மகிமையின் கர்த்தரே
உம்மிடமே எல்லாரும்
திருப்பப்படுவதற்கே
இரக்கமாகப் பாரும்;
நீர் அந்தகத்தை நீக்கமேன்,
தப்பாய்ப்போனாரைத்தேடும்
பேய் நரரைக் கெடுப்பானேன்.
அடிப்பலமும் வேரும்
இல்லாரை ஊன்றக் கட்டும்.

8. பிதா குமாரன் ஆவியே
த்ரியேக கர்த்தரான
உன்னதமான தெய்வமே,
ரட்சிக்கப் பலமான
ராஜாதி ராஜா, உம்மண்டை
வந்தும்மை என்றும் பாட
அடியார் நற்போராட்டத்தை
இவ்வுலகில் போராட
அளுக்ரகம் அளியும்.

P. Gerhardt, † 1676.