104. ஆ, எங்கள்மேல் இரக்கம்

1. ஆ, எங்கள்மேல் இரக்கம்
வைத்திரும் இயேசுவே;
பேய்ச்சூது விலக்கம்
அப்போதுண்டாகுமே.

2. இரட்சிப்பிங்கும் அங்கும்
கிடைக்க, மீட்பரே,
மெய் வேதம் காத்துத் தங்கும்
அடியாரிடமே

3. மெய்ப் பொழுதே ப்ரகாசம்
தந்தெங்களோடிரும்.
தப்பற்ற விசுவாசம்
எங்களைக் காக்கவும்.

4. ஆ, ஸ்வாமி, ஆசீர்வாதம்
புரிந்து தங்குமேன்;
எல்லா வரப்ரசாதம்
பெருகப் பண்ணுமேன்.

5. ஆ, வேந்தரே, ஒதுக்கு
அளித்துத் தங்குமேன்;
பொல்லாரின் வர்மத்துக்கு
விலக்கிக் காருமேன்.

6. ஆ, உம்துண்மையோடு
கர்த்த்தாவே இங்கிரும்;
உறுதி தந்ததோடு
முடிய ரட்சியும்.

Josua Stegmann, †1632.