1. சபையைக் கிறிஸ்து காக்கையில்
சீறட்டும் பேய்கள் திரள்;
பிதாவின் வலப் பக்கத்தில்
உயர்ந்தவரின் விரல்
நரகின் பேரிலும்
ஆளுகை செய்யும்;
சபைக்கோ அவர்
சமீபமானவர்;
மா பலமாய் ரட்சிப்பார்.
2. ராஜாக்கள் ஆண்டவருக்கும்
பட்டாபிஷேகம் பெற்ற
தெய்வீக மைந்தனாருக்கும்
விரோதமாக மெத்த
வீம்பாய்க் கலகத்தைச்
செய்து அவரைக்
கேலி பண்ணியும்,
மாற்றார் எல்லாரையும்
பராபரன் நகைப்பார்.
3. ஆகாதோர் தெய்வ வார்த்தையைப்
பகைத்து நிந்திப்பார்கள்
ஆனாலும் நம்மை விட்டதைப்
பறிக்கவே மாட்டார்கள்.
நாம் விசுவாசித்து,
அவர் சொல்லுக்குக்
கீழடங்கினால்
நம்மைத் தம் கையினால்
நடத்தி மோட்சஞ் சேர்ப்பார்.
4. கிறிஸ்தோரே, பேயும் லோகமும்
பயமுறுத்தினாலும்,
அஞ்சாதிருங்கள், விண்ணிலும்
மண்ணுலகிலும் ஆளும்
மகா தயாபரர்
துணை நிற்பவர்,
பலம் திடனும்
இக்கட்டில் சாவிலும்
அளித்து ஜெயம் ஈவார்.
C.F. Gellert, † 1769.