106. ஆ, ஸ்வாமி இப்பூலோகத்தைப்

1. ஆ, ஸ்வாமி இப்பூலோகத்தைப்
பரிதபித்துப் பாரும்,
குறுகிற்று நல்லோர் சபை,
சன்மார்க்கர் லக்கம் தாழும்;
தெய்வீகச்சொல்லைக் கேம்போர் யார்
மகா அபூர்வமானார்.

2. வீண் தோற்றலான போதனை
நரர் சூதால் நடக்கும்;
நிசமில்லாத தப்பறை
அநேகரால் பிறக்கும்.
வெவ்வேறே உபதேசித்து;
இன்சொற்களாலே மந்தைக்குக்
கேடுண்டாக்குகிறார்கள்.

3. கள்ளத்தன உதடெல்லாம்
அறுந்து போவதாக;
ஆ, எங்கள் வாய் மேல்வட்டமாம்
என்றும் யார் எதிராக
நிற்பான் யார் எங்கள் ஆண்டவன்
என்றும் மகா இடும்புடன்
விஷம் இறைக்கிறார்கள்.

4. பாழான மாந்தருடைய
ரட்சிப்புக்காய் வருவோம்,
அவர்கள் கெஞ்சி வேண்டின
அனுக்ரகம் தருவோம்;
நன்றாக நமது மொழி
தீயோரின் மேலே குமுறி,
நல்லோரைத்தேற்றும் என்பார்.

5. கர்த்தாவின் சொல் ஏழு முறை
குகையிலே கொட்டுண்டு
உருக்கப்பட்ட வெள்ளியைப்
போல் சுத்தமாயிருந்து,
எல்லா உபத்ரவத்திலும்
நல் மாற்றாய் நின்று எங்கேயும்
வெளிச்சமாய் விளங்கும்.

6. ஆ, அதைச் சுத்தமானதாய்
நீர் எங்களுக்காய்க் காரும்;
அமார்க்கர் எங்களுக்குள்ளாய்
இடங்கொள்ளாதே பாரும்.
அதேனெனில் பொய்ப் போதகம்
நுழைந்தால் தீயோர் சதளம்
மகா விஸ்தாரமாகும்.

M. Luther, †1546.