1. ஆண்டவர் தெரிந்துகொண்டு,
கட்டுவித்து, நேசித்துக்
காத்த சீயோன் இப்போநொந்து
கெஞ்சிச் சொல்வதாவது;
“கர்த்தர் என்னைக்கைவிட்டார்
என்னைத்தான் என் ஸ்வாமியார்
சத்துருக்கள் கையில் தந்தார்.
என்னை ஆண்டவர் மறந்தார்.
2. ஆதரிப்போம் என்பதாக
வாக்குத்தத்தம் பண்ணினார்.
என் இக்கட்டிலே வீணாக
என்னால் தேடப்பட்டவர்
ஆ, என் பேரிலே இப்போ
என்றுங் கோபம் வைப்பாரோ.
நீசருக்கு முன் கிடைக்கும்
ரட்சிப்பெங்கே” என்றுரைக்கும்.
3. கர்த்தரோ உத்தாரமாகச்
சொல்வது: “என் சீயோனே,
மெய்தான், இப்போ துக்கிப்பாக
நிற்கிறாய் உன் நோவிலே;
ஆகிலும் தன் பாலனைப்
பெற்ற தாய் மறந்த்தைப்
பார்த்திரக்கமாயிரதே
போக்க் கூடுமோ, அஞ்சாதே.
4. தாய் இயற்கை அன்பில்லாமல்
போனபோரிலும், நாமோ
ஒருகாலமும் மாறாமல்
உண்மையானவர் அல்லோ;
உன்மேல், நேச சீயோனே
நிற்கும் அன்பைவைத்தோமே
நாம் உன் விசுவாசம் பார்த்தோம்
உன்னை நாம்மறக்கமாட்டோம்.
5. சாத்தானாலே நீ கலைய
வேண்டாம் அவன் பொய்யனே
பார், நாம் உன்னை நம்முடைய
கைகளில் பதித்தோமே;
உன்னை நாம் நினைப்பது
நிச்சயம், அஞ்சாதிரு.
நாம் கண்ணோக்கும் உன்மதிலை
நாம் கட்டாதிருப்பதில்லை.
6. உன்னை நாம் அன்பாகப் பார்த்து,
தாய் தன் சிறு பிள்ளையை
காக்கும்போல் நன்றாகக்காத்து
தாங்கி வருவோம்; உன்னை
நம்மை விட்டு, தீங்குண்டாம்
போது, யார் பிரிக்கலாம்?
துக்பத்தில் நீ உண்மையாக
நில்” என்றார், உத்தாரமாக.
Joh. Heermann. †1647.