1. கர்த்தாவே, நாங்கள் எங்களில்
மெஞ்ஞானத்துக் காகாதோர்,
நீர் அறிவைத் தரீராகில்,
அடியார் அறியாதோர்.
நீர் அருளின வேதமும்
அத்தோடே உமதாவியும்
வெளிச்சங்காட்ட வேண்டும்.
2. நீர் இதற்காகக் கிருபை
புரிந் தொத்தாசை பண்ணி,
முன் தீர்க்கதரிசிகளை
அனுப்பினதுமன்றி,
பிற்பாடு நேச மைந்தனை
சீர்கெட்ட ஆத்துமாக்களை
போதிப்பதற்குத் தந்தீர்.
3. இக்கிருபைக்குத் தோத்திரம்,
இவர் சொற் கேட்போமாக.
திவ்விய வார்த்தையைத் தினம்
அடியார் பக்தியாகத்
தியானம் பண்ணி யோசித்து
கைக்கொள்ளும்படி உமது
நல்லாவியை அளியும்.
4. சக்கந்தக்காரர் வாய்களை
அத்தால் அடக்குவியும்;
அவர்கள் வேலை எத்துணை
நிர்ப்பந்தமாய் முடியும்!
ஆ, ஸ்வாமி, உம்முடையசொல்
பலத்த குமுறலைப் போல்
மேல் வட்டமாவதாக.
5. உள்ளத்தில் அதனுடைய
விதை நன்றாய்த் தரித்து,
ஒன்றே நூறாய்க் கனிதர
நீர் கிருபை அளித்து,
அடியார் அதை என்றைக்கும்
நன்னாளிலுந் துன்னாளிலும்
விடாப்படிக்குக் காரும்.
6. வழியிலே விதைத்தப்
பேய் கொண்டுபோம், இராது;
கற்பாறைப் பூமியில் விதை
முளைத்தும், வேர் ஊன்றாது;
முள் நடுவில் விழுந்ததோ
கிளம்பி ஓங்கு முன் இதோ
நெருக்கப்பட்டவியும்.
7. நற்பயிர் ஓங்கும் பூமிக்கு
அடியார் நெஞ்சொப்பாக
இருக்கும்படி, உமது
நல்வார்த்தையை நான்றாக
கேட்டேற்றுக்கொண்டு காக்கவும்
எல்லாப் பொறுமையோடேயும்
கனி கொடுப்போமாக.
8. என்றும் பாவிகளுடைய
வழியை விட்டுவிட்டு,
உபத்ரவத்தில் உத்தம
கிறிஸ்தோர்களாய்த் தரித்து,
துரிச்சையின் முள்ளுக்களைப்
பிடுங்கிவந்து, சாத்தானை
ஜெபத்தால் வெல்வோமாக.
9. ஆ, உம்முடைய வார்த்தையை
நீர் சுத்தமானதாக
அடியாருக்குக் காத்ததை
எங்கள் வெளிச்சமாக
இருக்கப் பண்ணி, சாவிலும்
அத்தால் பலந்திடனையும்
நற்புத்தியையுந் தாரும்.
10. கர்த்தா, எங்கும் உம்முடைய
நல்வார்தை சேர்வதாக;
ஆ, இயேசுவே, நீர் காட்டிய
வழியே செல்வோமாக;
தேவாவி, எங்கள் உள்ளத்தில்
நீர் தங்கி, வார்த்தையால் அதில்
நற்சீரை உண்டுபண்ணும்.
D. Denicke. † 1680.