1. என் மேய்ப்பர் கர்த்தரானவர்,
நன்றாகக் காத்து வந்தார்,
அனைத்தையும் என் ரட்சகர்
குறைவில்லாமல் தந்தார்.
அனைத்திலும் ருசிகர
தேய்வீக வார்த்தையாகிய
நல் மேய்ச்சல் எனக்குண்டு.
2. ஜீவாற்றின் நல் கால்வாய்களை
அவர் எனக்குக் காட்டி,
என் ஆத்துமத்தின் தாகத்தை
அத்தால் நன்றாக ஆற்றி,
தாம் இயேசு என்னப்பட்டதில்
அடியானை நற்பாதையில்
நேரே நடத்துவாரே.
3. ஓர்வேளை ஜோதியின்றியே
நான் மரணக் கிலியின்
இருண்ட பள்ளத்தாக்கிலே
நடந்தும், அவதியின்
பொல்லாப்புக்குப் பயப்படேன்;
நீர் நீட்டுங்கோலைப்பற்றுவேன்,
அது வழியைக் காட்டும்.
4. அடியேனுக்கோர் பந்தியைப்
பகைஞர்க் கெதிராக
வைத்தெண்ணெயால் என் சிரசை
மகா கடாட்சமாக
நீர் அபிஷேகஞ் செய்கிறீர்
அடியேனை நீர் மறவீர்.
என் பாத்திரம் நிரம்பும்.
5. என் ஜீவனுள்ள மட்டுக்கும்
தெய்வன்பை நான் உணரும்
படிக்கு, என்னை நன்மையும்
கடாட்சமுந் தொடரும்.
கர்த்தாவின் வீட்டில் இங்கேயும்
பிற்பாடங்கேயும் என்றைக்கும்
நிலைத்துக் கொண்டிருப்பேன்.
W. Musculus, † 1563.