110. நாம் தமக்குப் பயப்பட

1. நாம் தமக்குப் பயப்பட
சீனாய் மலையின்மேல கர்த்தா
கொடுத்த பத்துக் கற்பனை
ஏதென்று கேட்டுச் சீரடை,
மனிதனே.

2. உன் தேவனாங் கர்த்தர் நாமே,
வேறோன்றையும் பணியாதே;
நீ விக்ரக வணக்கத்தை
வீண் பக்தி யாவையும் பகை,
மனிதனே.

3. கர்த்தாவின் நாமக்த்தை வீணில்
வழங்காயாக, ஏனெனில்
வீணில் வழங்கும் யாவர்க்கும்
தப்பாத ஆக்கினை வரும்,
மனிதனே.

4. நீ ஓய்வு நாளில் சகல
லௌகீக வேலையும் விட
நினைத்தந்நாளை முழுதும்
நீ பரிசுத்தமாக்கவும்,
மனிதனே.

5. சுகத்துடன் உன் ஆயுசு
நீடித்திருக்கிறதற்கு,
தகப்பளையுந் தாயையும்
நீ எண்ணிக் கனம் பண்ணவும்
மனிதனே.

6. கொலை செய்யாமல், உனக்கு
அடுத்தவனை நேசித்து,
எல்லார் ரட்சிப்பையும் மெய்யாய்
விரும்பித் தேடக்கடவாய்
மனிதனே.

7. நீ விபசாரம் பண்ணாதே,
அசுத்த உலகத்திலே
உன் நெஞ்சும் வாக்கும் மார்க்கமும்
கற்புள்ளதாயிருக்கவும்,
மனிதனே.

8. நீ களவு செய்யாமலும்,
திருட்டும் அநியாயமும்
பண்ணாமலும், கர்த்தாவுக்குப்
பயந்து, உண்மையாயிரு.
மனிதனே.

9. பொய் சாட்சியைப் பிறருக்கு
விரோதமாய்ச் சொல்லாதிரு;
பொய்க் காரரான மனிதர்
பிசாசுடைய புத்திரர்.
மனிதனே.

10. அடுத்தோன் வீடு வஸ்துக்கள்
பெண்சாதிவீட்டாள் ஜீவன்கள்
உண்டே, அதில் ஒன்றாகிலும்
நீ இச்சியாதிருக்கவும்,
மனிதனே.

11. இக்கற்பனைகளாலே நீ,
குற்றவாளி என்றறி,
கிறிஸ்துக்குள்ளாய்க் கிறிஸ்தோனைப்போல்
இந்நூல்படி நடந்துகொள்.
மனிதனே.

12. ஆ, இயேசு ஸ்வாமி, தேவரீர்
இதற்கொத்தாசை பண்ணுவீர்;
அடியார் கிரியையெல்லாம்
மகா பிழை குறையுமாம்;
இரங்குமேன்.

Martin Luther, † 1546.