111. பாதகரின் தீவினைக்கும்

1. பாதகரின் தீவினைக்கும்
பாவிகளின் பாதைக்கும்
துர்ச்சனரின் தோழமைக்கும்
மார்க்கத்துக்கும் மிகவும்
தூரமாகி; கர்த்தரைத்
அவருக்கொப்புக் கொடுத்தோன்
என்றும் பாக்கியம் பெருத்தோன்.

2. கர்த்தர் தான் அன்பாகத் தந்து
போதிவிக்கும் வார்த்தையை
வாஞ்சையார் ஆராய்ந்துவந்து,
அல்லும் பகலும் அதை
யோசித்து உட்கொள்பவன்
மிகுதியும் பாக்கியன்;
அவர் ஆவி என்றென்றைக்கும்
அம்மன்னாவினால் பிழைக்கும்.

3. அவன் ஆற்றுக்காலிடத்தில்
நடப்பட்டு இனிய
கனிகளைத் தருணத்தில்
தருஞ் செழிப்பாகிய
நல் மரத்துக்கொத்தவன்.
அவன் நல்ல யோக்கியான்;
அவன் நன்மையாய்ப் பலிக்கும்,

4. ஆகிலும் ஆகதாதவர்கள்
காற்றில் ஓடிப்போம் பதர்;
ஞாயத் தீர்ப்பிலே அவர்கள்
தள்ளப்பட்டு அழிவர்.
நீதிமான்களின் வழி
கர்த்தருக்குப் பிரீதி,
அது ரட்சிப்பாய் முடியும்;
துஷ்டர் மார்க்கமோ அழியும்.

Rud. Friedr. V. Schultt, um † 1726.