112. இயேசுவே, நீர் பிதாவோடும்

 1. இயேசுவே, நீர் பிதாவோடும்
நல்லாலோசனை  தரும்
பரிசுத்த ஆவியோடும்
வந்தென் நெஞ்சில் என்றைக்கும்
வாசமாகத் தாபரியும்,
எனக்க நற்சீர் அளியும்.

2. ஆத்துமத்துக் கின்பமான
உம்முடைய வார்த்தையை
நம்ப, நீர் உறுதியான
நல்ல விசுவாசத்தை
அடியேனின் வாழ்வுக்காக
தயவாய் அளிப்பீராக.

3. மோட்ச பாதை இன்னதென்று
உம்முடைய வார்த்தையால்
கேட்ட நாங்கள் அதில் சென்று
போவதற்கு நீர் அன்பால்
அடியார்களை எழுப்பும்,
உமதாவியை அனுப்பும்.

4. எனக்கு நன்றாய்த் தெரிய
அவர் என்னைப் போதித்து
என்னை ஏவினாலொழிய
என் இருண்ட நெஞ்சுக்குத்
தேவையான தெளிவில்லை.
நற்குணமுஞ் சீருமில்லை.

5. ஆ, நல்லாவியே, நீர் வந்து
நான் தேவன்பை உணர
எனக்கு வெளிச்சந் தந்து
என்னை முந்தி நேசித்த
கர்த்தரை நான் உண்மையாக
நேசிக்கப் போதிப்பீராக.

6. கர்த்தர் உன்னை என்றென்றைக்கும்
கேளார்   என்றென்நெஞ்சிலே
மிகவும் பயம் உண்டாக்கும்
போது, இயேசு சொன்னதே
மெய் என்றென்னைத் தேற்றுவியும்
அப்போதென் பயந் தெளியும்.

7. இயேசு என்னில் தங்குமட்டும்
பயமில்லை, அவரை
நான் சிநேகமாகப் பற்றும்
போதும், அவர் வார்த்தையை
நம்பும்போதும் தேற்றுகின்றார்.
நல்வரங்களையும் ஈவார்.

8. நெஞ்சே, நீ பயப்படாதே,
இயேசு உன்னைக் காக்கவே
பேய்க்குன்மேல் பலம் இராதே;
தெய்வ சமாதானமே
உன்னைப் பேயின் எச்சதிக்கும்
தப்பப் பண்ணி ஆதரிக்கும்.

9. எவ்வியாகுலமும் பாடும்
எந்தச் சூதும் பாடும்
நேரிட்டாலும் உம்மால்மாறும்,
என்னை ஒன்றும் என்றைக்கும்
உம்மை விட்டு பிரிக்காது,
விட ஏவவும் மாட்டாது.

10. என்னை மீட்ட நீர் முன்னாலே
விண்ணுக்கேறிப் போனீரே,
நானும் உமது பின்னாலே
வர வாஞ்சையானேனே
ஆ, நீர் என்னை வரச்சொல்லும்
அன்புமாகச் சேர்த்துக் கொள்ளும்.


Rud.Friedr.v.Schultt, um †1724.