1. ஆ, ஸ்வாமி என் பிறப்பினால்
உமக்குத் தூரமான
நான் மீண்டும் ஞானஸ்நானத்தால்
உமக்குப் பிள்ளையான
சீர் மாறுதல் மா பாக்கியம்;
ஆ, உமக்கென்றுந்தோத்திரம்,
பிதா குமாரன் ஆவி.
2. நீர் என்னைத் தள்ளிப்போடவும்,
தண்டிக்கவும், என் பாவம்
என்னை ஏற்றவனக்கியும்,
நீர் என்மேல் பரிதாபம்
வைத்தென்னை உம்மண்டையிலே
அன்பாகச் சேர்த்துக்கொண்டீரே;
ஆ, தயவுள்ள ஸ்வாமி.
3. இத்தாலே என் பித் நீரே,
நான் உம்முடைய பிள்ளை;
பலவீனத்தை என்னிலே
நீர் கண்டும், மோசமில்லை;
நான் பக்தியாய் என் தாழ்மையில்
மன்னிப்புக் கேட்டுக்கொள்கையில்
நீர் என் ஜெபத்தைக் கேட்பீர்.
4. த்ரியேகரான உம்மையே
நான் பிள்ளைப் பக்தியாகப்
பணிந்து, உமக்கேற்கவே
நடப்பேன் என்றதாகத்
திருமுழுக்கில் அடியேன்
உடன்படிக்கை பண்ணினேன்;
இதை நினைப்பேனாக.
5. பிசாசை நான் சமூகமாய்
என் மனத்தால் வெறுத்தேன்
என்றப்போதுமக்கு முன்பாய்
நான் வார்த்தையைக் கொடுத்தேன்
ஆ, அதின் தந்திரங்களை
நான் வெல்ல என் இதயத்தை
நான் உமக்கொப்புவிப்பேன்.
6. பொல்லாததான மாமிச
துரிச்சைக்கும் நான் சாக
கடன் என்மேல் இருக்கிற
படியால், நான் நன்றாகப்
போராடி சிலுவையிலே
அதை அறைகிறதற்கே
நீர் பலத்தை அளியும்.
7. பிதா குமாரன் ஆவியே,
நான் உம்மைப் பற்றிவந்து,
நான் அன்று தந்தவார்த்தைக்கே
இசைபாய்த்தான் நடந்து,
இடம்கொடாமல், மோட்சத்தில்
உம்மண்டை சேர்வேனாக.
J. Bornsckurer, †1677.