119. நல்மேய்ப்பர் ஆடுகளுக்காய்

1. நல்மேய்ப்பர் ஆடுகளுக்காய்
மரிக்க வந்து, சாவில்
கிடந்த நம்மைத் தயவாய்
நினைக்கும் அன்றிராவில்

2. அன்புள்ள கையில் அப்பத்தை
எடுத்துத் தோத்திரித்து,
அதற்குப் பிறகே அதைச்
சீஷர்களுக்குப் பிட்டு:

3. “வாங்கிப் புசியுங்கள், இது
உங்களுக்காய்ப் படைத்துக்
கொடுக்கப்பட்ட எனது
சரீரம்” என்றுரைத்து,

4. பிற்பாடு பாத்திரத்தையும்
எடுத்துத் தந்தன்பாக
உரைத்த்து: அனைவரும்
இதில் குடிப்பீராக.

5. இதாக்கினைக் குள்ளாகிய
அனைவர் ரட்சிப்புக்கும்
சிந்துண்டுப்போம் என்னுடைய
இரத்தமாயிருக்கும்.

6. புது உடன்படிக்கைக்கே
இதோ, என் சொந்த ரத்தம்
இறைக்கப்பட்டுப்போகுமே,
வேறே பலி அவத்தம்.

7. முன்னாள் பலி எல்லாம் நிழல்,
நானே கடனைத் தீர்ப்பர்;
என் ரத்தத்தால் ரட்சிக்குதல்
உண்டாகும், நானே மீட்பர்.

8. இதுங்கள் அக்ரமங்களைக்
குலைக்கிற ஏற்பாடே,
இதற்குச் சேர்ந்தென்பட்சத்தை
நினையுங்கள்” என்றாரே.

9. ஆ, ஸ்வாமி, உமக்கென்றைக்கும்
துதி உண்டாவதாக
இப்பந்தியால் அடியேனும்
பிழைத்துக்கொள்வேனாக.

J. Heermann, † 1647.