1. சிஷ்டிகரே, ஆ, உமது
பலம் சிநேகம் ஞானம்
தயையையும், என் மனது
பார்த்தால், அதன் தியானம்
மா ஆச்சரியம் எனக்கு
உண்டாகும் அதற்கெனது
துதி எல்லாம் போதாது.
2. நீர் செய்த யாவுங் கண்ணுக்கு
மா அற்புதம்; பரமும்
புவியும் யாவும் உம்து
மகத்துவம் கனமும்
காண்பிக்கும்; சூரியன் நிலா
நட்சத்திரங்களின் மகா
திரள் உம்மைத் துதிக்கும்.
3. யார் காற்றைத் திட்டம்பண்ணினார்.
மழை யாராலே பெய்யும்
தரையிலே இருந்து யார்
எத்தேசங்களிலேயும்
புல் பூண்டுகள் முளைக்கவும்
கற்பிக்கிறார், யார் தினமும்
சாப்பாடு ஈவார், நீரே.
4. உம்மால் குளிரும் வெய்யிலும்
நற்காலமும் உண்டாகும்;
உம்மாலே சில வேளையும்
பலத்த காற்றுண்டாகும்;
கடற்கரை, எவ்வுயிரும்,
மரம் பயிர்வகைகளும்
எல்லாம் உம்மால் இருக்கும்.
5. மனுஷனின் சரீரத்தை
விநோதமாய்ச் சிஷ்டித்தீர்,
அழிவில்லாத ஆவியை
அத்தோடு நீர் அளித்தீர்,
உமது மேன்மை அன்பையும்
சிஷ்டிக்கப்பட்ட யாவரும்
புகழக்கடவார்கள்.
6. ஆ, எங்களை, தயாபரா,
முடியவும் காப்பாற்றும்
எங்கும் குடியிருக்கிற
எல்லா உலகத்தாரும்
உம்மைப் பணிதல் ஞாயமாம்
நீரே உண்டாணதற்கெல்லாம்
அதிபதி, கர்த்தாவே.
C.F. Gellert, † 1769.