135. பொன்னும் லோகசெல்விக்கையும்

1. பொன்னும் லோகசெல்விக்கையும்
அல்ல தேவ கிருபையும்
ஆசிர்வாதமும் நன்றே
கர்த்தரை மெய்ப் பக்கியாக
நம்புவேன் எல்லாம் மெய்யாகப்
பயமற்று நிற்பானே

2. என்னை அன்பாய் போஷிப்பித்து
வெகு நன்னையை அளித்து
வந்தவரை நம்பேனோ.
என்னை ஆச்சரியத்தோடு
முன் நடத்தினோர் இப்போது
என்னைக் கை விடுவாரோ.

3. கவலைகளால் நிரப்பும்
மனக்லேசத்தைக் கிளப்பும்
நிலையற்ற பொருளை
வெகுபேர்கள் இச்சித்தாலும்,
நான் விரும்புவதோர்க்காலும்
மாறா தேவ கிருபை.

4. கர்த்தருக்கென் விருப்பங்கள்
ஏற்றிருந்தால் என் ஜெபங்கள்
வாய்க்கும் என்று நம்புவேன்
அவருக்கென் ஆவியையும்
தேகத்தையும் ஜீவனையும்
எல்லாம் ஒப்பிவிக்கிறேன்.

5. அவர் வேளை வரும்போது
என் குறைகளை அன்போடு
நிறைவாக்க அறிவார்,
நானோ வேளை வழியையும்
குறியேன், எல்லாவற்றையும்
ஏற்றவாறு செய்கிறார்.

6. ஜீவனோடென்னை வைத்தாலும்
தம்மண்டை அழைத்திட்டாலும்
அவர் சித்தம் நல்லதே.
இந்த உலகம் அழியும்.
மாளா ஆஸ்தியும் கதியும்
விண்ணில் வைத்திருக்குமே.