1. என் நெஞ்சே கிறிஸ்துவின் மகா
அதிசயத்தைப் பாடிவா,
கொடிய சாவை அவர்தான்
விழுங்கிப்போட்ட பலவான்.
2. தாம் சிந்தின இரத்தத்தின்
பலியால் அவர் உலகின்
கடன்களைச் செலுத்தினார்.
பிசாசையும் ஜெயங்கொண்டார்.
3. பரத்திலும் புவியிலும்
அனைத்தின் அதிகாரமும்
அடைந்த இந்த ஆண்டவர்
என் கர்த்தர், என் இரட்சகர்.
4. என் நெஞ்சை அவர் தம்மண்டை
திருப்பிக் கொண்டடியேனை
தம்மோடே சேர்த்திருக்கிறார்.
தாம் தாமும் என் கதியானார்.
5. நான் அவராலே நற்கிளை,
அவருடைய நீதியைத்
தரித்துக் கொண்டிருக்கிறேன்.
அத்தாலே மகிமை யாவேன்.
6. அனாதி சூரியன் என்னில்
வெளிச்சமாய் தோன்றுகையில்
என் மேன்மை தூதர் மேன்மைக்கு
ஒப்பாக இருக்கின்றது.
7. பிதா அடியேன் பேரிலே
இரக்கம் வைத்தென்னுடனே;
“நீ கிருபை அடைந்தவன்,
நீ நம்முடைய புத்திரன்.
8. நீ வேன்டியதை நம்மைக்கேள்,
நாம் ஈவோம், ஏனெனில் உன் மேல்
கண்ணோக்கமாந் தகப்பனார்
நாம் தாமே” என்றுரைக்கிறார்.
9. என் ரட்சகராம் இயேசுவால்
நான் சேர்க்கப்பட்டபடியால்
தேவாவியின் வரங்களும்
அடியேனுக்ககப்படும்.
10. இவை ஊற்றாம் அவரிலே
இருந்தென்மேலே பாயுமே;
செடியினால் கிளைகளும்
பலத்துப் போய் கனி தரும்.
11. பேயோடெதிர்ப்பதற்கு நான்
என் இயேசுவாலே பலவான்;
எனக்குப் பாவம் யாவுமே
மன்னிக்கப்பட்டிருக்குமே.
12. ஞாயப்ரமாணம் பாவியைச்
சபிக்குமென்று மனத்தைக்
கலங்கப் பண்ணப் பார்க்கிற
பிசாசின் வர்மம் விருதா.
13. அதென்னைச் சீற வரவே,
நான் மீட்பர் மரணத்திலே
முழுகின இஞ்ஞானத்தின்
மழுக்கென்கோட்டையானது.
14. சாவென்னைக் குத்தியும் அத்தால்
நான் சாவதில்லை; ஏனென்றால்
நான் கிறிஸ்துக்குள் இருக்கிறேன்,
நான் சாவில் ஜீவன் அடைவேன்.
15. அன்புள்ள தேவ மைந்தனே,
என் வாழ்வே, என மகிழ்ச்சியே,
என்னாலே உமக்கென்றைக்கும்
தோத்திரமே உண்டாகவும்.
Stephan Praetorius, † 1603.