154. ஆதாம் விழுந்ததாலே நாம்

1. ஆதாம் விழுந்ததாலே நாம்
சமூலமாகக் கெட்டோம்,
கதிக்கும் நன்மைக்கும் எல்லாம்
வேரோடு தானே செத்தோம்.
மா நேசத்தின்
மீட்பின்றி எவனுக்கும்
பேயின் பொல்லா
விஷமான
கடி ஆறாதிருக்கும்.
ஆறாதிருக்கும்

2. கர்த்தாவின் சொல்லைச் சர்ப்பத்தின்
பொய்க்காய்ப்புறக்கணித்த
ஏவாளால் சாவனைவரின்
திரளுக்கும் பலித்த
இக்கட்டுண்டே;
திரும்பலே
நர்ரைக் கர்த்தர் தாமே
குமாரனால்
தாங்காவிட்டால்
நாம் என்றுங் கெட்டோராமே.
நாம் என்றுங் கெட்டோராமே.

3. இப்போதும் அந்நியதப்பால்
நாம் சீரில்லர்திருக்கும்
போல், அந்நிய கை அன்பினால்
விழுந்த்தை எடுக்கும்.
ஆதாமுக்குள்
மகா இருள்
அடைந்தெல்லாரும் செத்தோம்,
அவ்விதமாய்த்
தாரளாமாய்க்
கிறிஸ்துவால் உயிர் பெற்றோம்.

4. பகைஞரான நமக்குப்
பிதா சுதனைத் தந்தார்;
பலியாய் இவர் நமது
நிமித்தமே இறந்தார்;
உயிர்த்த பின்
அனைவரின்
பாவங்களைத் தொலைத்தோர்
இவ்வல்லவன்;
இவருடன்
நாம் ஜீவனை அடைவோர்.

5. இவர் வழியும் வாசலும்
சீரற்றவர்க் குதித்த
வெளிச்சஞ் சீரும் ஜீவனும்,
இவர் பிதா அளித்த
பிசகில்லா
மெய்யாகிய
அனாதி வார்த்தையானோர்;
இவரையே
நாம் பற்றவே
நாம் மோட்சத்துக்குள்ளானோர்.

6. கர்த்தாவை அல்ல, மாந்தரைச்
சார்ந்தோன் சபிக்கப்பட்டோன்
அவன் கர்த்தாவின் தயவை
பெறாமல் ரட்சிப்பற்றோன்;
பொய், வேற்றுமை.
துணைகளை
தன்னிச்சையாய்ப் பிடிக்கும்
நின் மூடனைப்
பேய் தன்னண்டை
இழுத் தலைக்கழிக்கும்.

7. கர்த்தாவை விசுவாசித்தோன்
வெட்காதோனாய்வெல்லுவான்;
இக்கன்மலையில் கட்டினோன்
அசையில்லாமல் நிற்பான்
தீங்காபத்தும்
அணுகியும்,
கர்த்தாவை அண்டும் பிள்ளை
தன் மேன்மையை
இழந்ததை
ஓர்க்காலுங் கண்டேன் இல்லை.

8. நீர் என்னை உபதேசிக்கும்
மொழி என் வாயை விட்டுப்
பிரியவே ஒட்டாதேயும்
என்றும்மைத் தண்டனிட்டு
நான் கேட்கிறேன்;
அப்போ கெடேன்,
அத்தால் மகிழ்ச்சியானேன்;
அவ்வார்த்தையில்
நான் ஊன்றுகில்,
நான் மரணத்தைக் காணேன்.

9. உம் வாத்த்தையே என்னுடைய
வழிக்கும் கால்களுக்கும்
தினம் வெளிச்சங் காட்டிய
தீவட்டியாயிருக்கம்;
இவ்வெள்ளியே
எங்களிலே
உதித்தால், கண் தெளியும்;
ஆண்டவரின்
மா நேசத்தின்
வரங்களும் தெரியும்.

Laz Spengler, † 1534.