1. இயேசுவே எத்தன்மையான
கேடும் என்னில் இல்லையோ,
ஆதாமுடைய வித்தான
துர்க்குணத்தான் அல்லவோ,
பாவி நான் என்றடியேனும்
வெட்கத்தோடே சொல்ல வேண்டும்.
2. என் வழிகள் தாறுமாறு,
என் குணம் பொல்லாதது,
அது நன்மைக்குதவாது.
தீமைக்கோ மா விரைவு
என் மனம் இத்தால் உண்டாகும்
கேட்டுக்கெப்போ நீங்கலாகும்.
3. என்னை உமதாவியாலே
நீர் திருப்பி, யாவையும்
உமது இரக்கத்தாலே
என்னில் மனிதன் சாகத்
துர்ச்சீர் யாவும் போவதாக.
4. பாவத்தால் நான் இங்கே தாழ
செத்தோகாய்க் கிடக்கிறேன்;
தீய மனம் என்னில் மாற
ஜீவனுக்கே அடியேன்
ஏங்குகின்றேன், தயவாக
என்னை உயிர்ப்பிப்பீராக,
5. மாமிசத்தின் இச்சையாலே
தீட்டென்மேல் வராமல், நான்
ஆவியின் பலத்தினாலே
அதை வெல்வதற்குத்தான்
புது நெஞ்செனக்குண்டாகும்,
ஆவியைப் பலமுமாக்கும்.
6. நான் விழித்துக் கொண்டத்தோடே
வேண்டிக்கொண்டு, நித்தமும்
என்பொல்லாத இச்சையோடே
நான் எதிர்த்து நிற்கவும்.
அதைக் கொல்லவும் அன்பாக
சக்தியை அளிப்பீராக.
7. நான் இளக்கரித்திராமல்,
சத்துருக்கள் சோதிக்கும்
வேளையில் நான் பின் வாங்காமல்
நிற்க அங்ககப்படும்
க்ரீடம் என்னைப் பெலனாக
ஏவிக்கொண்டிருப்பதாக.
8. நான் போராடிக் கொண்டிருக்கும்
போரில் ஒரு வேளையும்
நான் விழுந்தால், நீர் கொடுக்கும்
சக்தியால் திருப்பவும்
வென்று, முடிவு மட்டாக
உம்மிலே நிலைப்பேனாக.
L.A. Gotter, † 1735.