1. தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, பாவக் குற்றத்தை
நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
2. மன்னிப்பை எவனானிலும்
தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும்
தாழ்வான மனத்தாலே
பணிந்து பயப்படவே,
மனத்தரிதிரருக்கே
மன்னிக்கிறீர், கர்த்தாவே.
3. நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்,
என் புண்ணியம் அவத்தம்;
தெய்வன்பையே நான் நம்புவேன்;
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேதவார்த்தையில்
உண்டாமே, நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்.
4. ராச்சாமங் காப்பவர், எப்போ
விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ
அதிக ஆவலாகக்
கர்த்தாவை நோக்கிக்காத்திரு;
ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்.
5. என் பாவம் பெரிதாகிலும்
தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்;
மீட்பதற்கும் பெரிதே,
ஆ,இஸ்ரவேலின் பாவங்கள்
அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.
Martin Luther † 1546.