162. மா பொல்லாப்பை நடப்பித்தேன்

1. மா பொல்லாப்பை நடப்பித்தேன்
பாவக்கேடு மிஞ்சிற்று,
நல் வழியைவிட்டு விட்டேன்,
அத்தால் இப்போதுமது
கோபத்துக்குப் பயமாக
நிற்கிறேன் திகைப்புமாக.

2. நான் கடலைத்தான் கடந்தும்
ஆழத்தில் இறங்கியும்,
காற்றின் வேகமாய்ப்பறந்தும்
எவ்விடத்தில்லாகிலும்
தப்பேன், என்னை எந்தத் திக்கும்
தேவரீரின் கை பிடிக்கும்.

3. ஆகையால் என் த்ரோகங்கண்ட
உம்மைத்தான் பணிகிறேன்;
பிள்ளைப் பாக்கியம் இழந்த
பாவிமேல் இரங்குமேன்;
என் திரள் பொல்லாப்புக்காக
அப்புறம் எரியீராக.

4. மா கடற்கரை மணலை
எண்ணத் தக்கதாகியும்,
என் பிழைகளின் திரளை
எண்ணி, என்மேல் சுமரும்
குற்றங்களினால் உண்டாகும்
தீங்கைச்சொல்லயாரால் ஆகும்.

5. அழுங்கள், பொங்காரமாக
என் இரண்டு கண்களே,
மிகவும் என் பிழைக்காக
அழ என் தலையிலே
கண்ணீர் ஊற்றத் திறவுண்டு
ஓட எனக்காசைபுண்டு.

6. கல்நெஞ் செனக்குள் பிளந்து,
கண்ணீர் என் முகத்திலே
வெள்ளம் வெள்ளமாய்ப் புரண்டு
பாய்ச்சலானால் நம்மையே;
இப்வாறாயிளும் காணாது,
ரத்தம் ஓடியும் போதாது.

7. நீரோ, தேவ ஆட்டுக்குட்டி,
நிந்தின இரத்தமே
பாவியைக் குணப்படுத்தி,
ஆக்கினையை நீக்குமே;
ஆ, என்மேல் ஒரே துளியும்
படக் கிருபை புரியும்.

8. என் சுமையை நீர் ஒழித்து
ஆழமாய்க் கடலிலே
தள்ளி, என்னை ஆதரித்து,
சுத்தமாக்கும், இயேசுவே.
உம்மில் என்தன் துக்கமாற்றும்
உமதாவியால் காப்பாற்றும்.

J. Frenack, † 1677.