1. உமதாட்டை, மேய்ப்பரே,
நீர் இரக்கமாய் நோக்கீரோ;
தோளில் அதை வீட்டுக்கே
கொண்டுபோக நீர் வரீரோ;
நான் எல்லா இக்கட்டுக்கும்
நீங்க என்னை ரட்சியும்.
2. இவ்வனாந்தரத்துக்குச்
சிதறண்டதை அன்பாகப்
பார்த்துத் தூக்கி, உமது
மந்தையோடே சேர்ப்பீராக;
உமது தோழத்திலே
நான் வரட்டும், இயேசுவே.
3. விண்ணில் மண்டலத்திலே
மோசமும் பயமுமற்று
மேயும் மந்தையில் தானே
நானுஞ் சேர்ந்து, அவ்விடத்து
மகிமையில் உம்மையே
தரிசித்தால் நன்மையே.
4. இந்தக் கேட்ட லோகத்தில்
மா நெருக்கம் எனக்குண்டு,
சத்துருக்கள் நடுவில்
ஏழையான நான் இருந்து
மெத்தக் கலங்குகின்றேன்
என்னை ஆதரியுமேன்.
5. என்னை ஓனாய்களுடைய
மோசத்துக்குத் தப்புவியும்;
எனக்கிங் கிருக்கிற
தீமைகள் எல்லாம் முடியும்
நாள் வர, நீர் உம்மண்டை
என்னைச் சேர்த்தால் தாவிளை.
J. Scheffler, † 1677.