177. இரக்கம்பெற்றேன் கர்த்தராலே

1. இரக்கம்பெற்றேன் கர்த்தராலே
இதற்கு நான் எம்மாத்திரம்,
எதிர்த்தேனே அகந்தையாலே
நான் மீட்கப்பட்ட தற்புதம்;
அத்தாலே பூரித்தடியேன்
இரக்கத்தைப் புகழுவேன்.

2. முன்னே நான் கோபத்துக்காளாக
நின்றோன், இப்போதுகந்தவன்;
சுதனின் ரத்தத்தால் அன்பாக
ஒப்புரவாக்கப் பட்டவன்;
இப்பாகியத்தை எனக்கு
இரக்கமே அளித்த்து.

3. பூலோகத்தாருக்கு முன்பாக
இதை அறிக்கைபண்ணுவேன்.
இரக்கம் ஒன்றை நித்தமாக
என் நெஞ்சில் வைத்து யோசிப்பேன்
பணிந்து களிகூருவேன்,
இரக்கத்தைப் புகழுவேன்.

4. இரக்கத்தில் நான் நிலைக்கட்டும்,
அதே என் மேன்மை என்கிறேன்.
என் விசுவாசம் அதைப்பற்றும்,
அதைமுன்னிட்டு வேண்டுவேன்.
அதேதுன்னாளில் என்பலம்,
நான் சாகும்போதும என்திடம்.

5. இரக்முள்ள ஸ்வாமி, நீரே
இப்வேழையைத் தள்ளாதேயும்,
என் மீட்பர் சாவால், தேவரீரே
என் சாவில் என்னைச் சேர்க்கவும்
இரக்கத்தை அங்கடியேன்
களிப்பாய் என்றும் போற்றவேன்.

Ph. Fr. Hiller, † 1769.