1. பர்வதங்கள் விலகட்டும்,
என் கர்த்தாவின் கிருபை
நிற்கும், அவர்தாம் திடத்தும்
வார்த்தைப்படென்முத்திரை
கலங்கேன் என் நேசர்தாம்
மாறோம் என்று சொன்னதாம்.
2. ஏழைகள் அங்கீகரிக்கத்
தக்கவார்த்தை இதுவே,
இது மனத்தைக் களிக்கப்
பண்ணும் ஆறுதலாமே,
திடன்கொள், உன் ரட்சகர்
உண்மை காப்போம் என்றவர்.
3. மிகவும் இளைத்தோருக்கும்
இத்தால் புதுப்பலமும்
கிருபையின் மா பெருக்கும்
சமாதானமும் வரும்;
என்னை என்றுந் தேவரீர்
இத்தால் தேற்றக் கடவீர்
4. நித்திய கோபாக்கினைக்கு
அஞ்சும் மனஸ்த்தாபத்தில்
என்னை நோக்கி, “கிருபைக்கு
மூலமான இயேசுவில்
நமதன்பு நிற்குமே”
என்று சொல்லும், கர்த்தரே.
5. தெய்வ வசனத்தில் ஊன்றும்
விசுவாத்தைக் கொடும்;
அப்போ தெய்விரோதஞ் சூழ்ந்தும்,
நீரே சொன்னது வரும்.
நீரே தந்தைச் சாத்தான்
சாவிலேயும் பறியான்.
Ph. F. Hiller, † 1769.