190. எளியவரான அனைவருக்கும்

1. எளியவரான அனைவருக்கும்
எல்லாவித ஞான ஐஸ்வரியமும்
சம்பூரணமாக
உண்டாவதற்காக
ஊற்றாகிய ஜீவனின் காரணரே,
அநாதி வெளிச்சமுமானவரே.

2. "யார் தவனமாக இருக்கிறானோ
என்னண்டையில் அவன் வரட்டும். இதோ,
நான் தயவாய்க் காட்டும்
ஈவே களைப்பாற்றும்
இவ்வூற்று அளிப்பது ஜீவ தண்ணீர்.
குடிப்பவன் என்றைக்கும் வாழ்வான்" என்றீர்.

3. இதோ தவிப்போடே உம்மண்டை வரும்
இவ்வாட்டை அன்போடே பராமரியும்.
என் மேய்ப்பர் நீர்தாமே
நான் எளியோனாமே;
மெய் நம்பிக்கையாக இருக்கிறேணே,
நீரோ இலவசமாய் ஈகிறீரே.

4. உம்மால் மனம் ஆறும்; இரம்மியமும்
எக்காலமும் வாழும் கதியும் வரும்;
எல்லாம் நீர் அளிக்கும்
ஈவாலே தித்திக்கும்
இதயம் மகிழ்ந்து சந்தோஷப்படும்,
சலிப்புறும் நோவும் அடங்கிவிடும்.

5. நீர் கிருபையாக உரைந்தபடி
இப்போதும் அன்பாக நீர்செய்தருளி,
என் தாகந் தணியும்;
நிறைவை அளியும்;
நான் என்றைக்கும் பரம வாஞ்சையிலும்
தெய்வன்பின் ருசியிலும் பெருகவும்.

6. அத்தோடு கசப்பை நீர் வார்க்கையிலும்
படிகிற நெஞ்சைக் கொடுத்தருளும்;
அதேனேனில்  நீரே
மா துன்பத்தின் கீழே
குடித்த உபத்ரவ பாத்திராதில்
குடித்தோன் பங்காளனே மகிமையில்.

7. சகித்தோர் நோகாமல் சந்தோஷித்தினி
ஓர் தீங்குமில்லாமல் நிறைந்தபடி
மகிழ்ந்து களித்து,
எப்போதுஞ் செழித்து,
பலனை அடையும் பதவியிலே
நான் கூட வாழட்டும், என் ரட்சகரே.

Ch.J.Koitsch, † 1735