1. உங்கள் தலைவராகிய
என் சத்தங் கேட்டெல்லாரும்
நான் உங்களுக்குக் காட்டிய
வழியில் உங்கள் பாடும்
உபத்ரவமும் என்னைப்போல்
எடுத்துக்கொண்டு வாருங்கள்.
2. வெளிச்சம் தான், என் சற்குணம்
நடக்கையால் விளங்கும்
பின் செல்பவர்களினிடம்
இருள் என்னால் அடங்கும்;
நன்றாய் நடக்கிறபடி
என்னால் தெரியும்; நான் வழி
3. நான் மனத்தாள்மையானவர்,
நான் பூரண அன்புள்ளோர்.
நான் என்றும் இன்ப வாசகர்,
நான் மெத்தனவுமுள்ளோர்.
என் கண் பராபரனுக்கு
நேராக நோக்குகின்றது.
4. ஆகாததாய் இருப்பதை
விலகிக் கபடற்ற
சீராயிருக்க உங்களை
நான் போதித்து நடத்தத்
தகுந்த வழி காட்டியே
நான் உண்மையான மீட்பரே
5. அதரிதென்றாலோ, நானே
உம் முன்னாலே போகின்றேன்.
நான்தான் போராடிவெட்டவே
என் வெற்றி தருகின்றேன்.
தலைவன் போகச் சேவகன்
பின் வாங்கினால் ஆகாதவன்.
6. தான் ஜீவன் தப்பிப்போம்விதம்
யார் பார்த்தானோ மரிப்பான்;
யார் அதை என்னிமித்தியம்
இழந்தானோ கெலிப்பான்;
என் பின்னாலே வராதவன்
என் மகிமைக் கபாத்திரன்.
7. இப்போதும் இயேசுஸ்வாமியை
உற்சாக மனமாகப்
பின் சென்றுகூடத்துன்பத்தைச்
சகித்துக் கொள்வோமாக;
அதேனெனில் பின் வாங்கினர்
கிரீடம் அடையாதவர்.
J.Scheffler, † 1677.