192. இயேசுவே, நீர்தாம் ஜீவநாள்

1. இயேசுவே, நீர்தாம்
ஜீவநாள் எல்லாம்
மோட்சத்துக்குச் சேருமட்டும்
கைதந்தெங்களை  நடத்தும்;
நீர் முன்னாலே போம்.
உம்மோடேகுவேன்

2. தீங்கு மிஞ்சினால்
எங்களை அன்பால்
கலங்காதபடி காரும்,
நிலைநிற்கும் வரந்தாரும்;
இங்கே சிலுவை,
அங்கே மகிமை.

3. சொந்தக் க்லேசமும்
நேசர் துன்பமும்
நெஞ்சைவாதித்தால், அன்பாகப்
பொறுமை அளிப்பீராக,
ஜீவக்கிரீடத்தை
நோக்க நீர் துணை.

4. நீர் இவ்வுலகில்
கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும்
ஆதரியும்; நாங்கள் சாகும்
போடும்மிடமே
சேரும், நேசரே,

Nikolaus Ludwig Graf. V. Zinzendorf, † 1760