1. மாசில்லாமல் துய்யதான
பளிங்கிலேயுந் தெளிவான
சுத்தாங்க ஊற்றே, இயேசுவே;
கேரூபின்கள் துய்ய சீரின்
ப்ரகாசம் யாவுந் தேவரின்
முன்பாக மங்கிப் போகுமே;
என் பாவத்தின் இருள்
அனைத்தும் உமக்குள்
தொலையட்டும்;
ஆ, இயேசுவே
நான் உமக்கே
ஒப்பாய்ச் சுத்தாங்கமாகவும்.
2. மரணமடையுமட்டும்
பிதாவின் சித்தமே ஆகட்டும்
என்றீர், அமர்ந்த இயேசுவே,
என் மனமும், தெய்வ சித்தம்
என்நன்மை, என்றதற்குநித்தம்
கிழ்ப்பட்டடங்கா, உம்மையே
பின்பற்றத் தேவரீர்
சகாயம் பண்ணுவீர்.
என் நோவிலும்,
நான் உமக்கே
ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.
3. ராப்பகல் உறக்கமற்று
நல்மேய்ப்பராய்ப் ப்பிரயாசப்பட்டு
நன்றாய் விழித்தீர், இயேசுவே,
நித்தம் நித்தமும் போதித்தீர்,
ஜெபத்தில் ராவிலும் தரித்தீர்,
மங்கா வெளிச்சக்கண்ணனே.
விழித்துக் கெஞ்சவே
நான் உம்மிடத்திலே
படிக்கட்டும்,
ஆ, இயேசுவே,
நான் உமக்கே
ஒப்பாய் விழித்திருக்கவும்.
4. நீர் நிறைந்த நேசமுள்ளோர்,
எல்லாரின்மேலுந் தயவுள்ளோர்
மகா அன்புள்ள இயேசுவே.
உம்மால் தீயோர் பேரிலேயும்
பகல் உதிக்கும், மாரி பெய்யும்,
பெரிய உபகாரியே
ஆ, இந்த உமது
குணம் என் மனது
அடையட்டும்
என் இயேசுவே,
நான் உமக்கே
ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.
5. குற்றமின்றி, க்ரோதமற்று,
எல்லா இகழ்ச்சியையும் பட்டு
மன்னித்தீர், சாந்த இயேசுவே.
தெய்வ வீட்டுக்கே யல்லாமல்
நீர் வேறெரிச்சலைக் காட்டாமல்
இருந்தீர், ஆட்டுக் குட்டியே.
நான் அந்தப் பக்தியாய்
மிகுந்த சாதுமாய்
இருக்கட்டும்
ஆ, இயேசுவே,
நான் உமக்கே
ஒப்பாகச் சாந்தமாகவும்.
6. சுய மேன்மையைத் தேடாமல்,
ஓர் மேட்டிமையையுங் காட்டாமல்
மா தாழ்மையானீர் இயேசுவே.
வேலைக்காரன் போல் திரிந்தீர்,
எல்லாரிலும் நீரே பணிந்தீர்;
மகா பெரிய கர்த்தரே;
என்னை உம்முடைய
அடிகளில் வர
படிப்பியும்.
என் இயேசுவே,
நான் உமக்கே
ஒப்பாகத் தாழ்மையாகவும்.
7. தூய தூய்மையின் மெய்யான
கண்ணாடி மாதிரியுமான
கர்புள்ள இயேசு கிறிஸ்துவே,
உம்மில் நெஞ்சும் வசனிப்பும்
முகம் நடையும் சஞ்சரிப்பும்
யெல்லாம் மா பரிசுத்தமே.
என் தேகம் ஆத்துமம்
எல்லாம் உம்மால் குணம்
அடையட்டும்
என் இயேசுவே,
நான் உமக்கே
ஒப்பாய்க் கற்புள்ளோனாகவும்.
8. நீரே சாப்பிட்டுக் குடித்த
விதமும் ஒழுங்கும் நல்திட்ட
ப்ராமாணமாகும். இயேசுவே,
நீர் பிதாவின் சித்தமான
படியே செய்வ துமக்கான
ஆகாரமாயிருந்ததே;
அடியேன் இவ்வித
ப்ரமாணமாய் வர
துணைக்கிரும்.
ஆ, இயேசுவே,
நான் உம்மிலே
நல்லொழுங் குள்ளோனாகவும்.
9. தேவரீரது பிரிய
தெய்வீகச் சாயலை அணிய
வாஞ்சிக்கிறேன், என் ஜீவனே
அதற்குமதாவியாலும்
பலத்த சத்துவத்தினாலும்
சகாயஞ் செய்யும், இயேசுவே.
நான் உமக்கேற்க்கிறக்
கனிகளைத் தர
எக்காலமும்
நான் உம்மிலே
நிலைக்கவே
சகாயங் கட்டளையிடும்.
Barth, Crasselius, † 1724.