195. கர்த்தாவாம் இயேசுவே, அடியார்

1. கர்த்தாவாம் இயேசுவே,
அடியார் நெஞ்சிலே
புதிய சீர் உண்டாக
நீர் மா வெளிச்சமாக
விளங்கி, நித்தமும்
அதில் ப்ரகாசியும்.

2. நீர் மகிமையாக
வெளிச்சமாகிய
கர்த்தா, நீர் பாவியான
அடியாருக்குண்டான
இருள் அனைத்தையும்
அகற்றியருளும்

3. உம்மால் வரமெல்லாம்
குறையற உண்டாகும்;
பிதாவின் சாயல் நீரே
எல்லாஞ் சீராக்குவீரே
நீர் தெய்வ தயவைக்
கொடுக்கும் முத்திரை.

4. மகா வெளிச்சமே,
அனாதிப் பொழுதே,
நாங்கள் உம்மால் நன்றாக
சீர்படத் தக்கதாக
நீர் எங்கள் நெஞ்சிலும்
தினம் ஒளிவிடும்.

5. அடியார் உம்மிலே
பிரிதலின்றியே
நிலைக்க நீர் அன்போடும்
நல்லாவியின் ஈவோடும்
அடியார் நெஞ்சிலே
இறங்கும், இயேசுவே

6. அடியார் பக்தியாய்
உமக்குக் கனமாய்
வெளிச்சத்தில் நடக்க
நீர் உமக்கேற்கத்தக்க
புதுக் குணத்தையும்
மென்மேலும் தரவும்.

7. நீர் எங்களை நன்றாய்ப்
பராமரித்தன்பாய்
வரந்தந் தாதரித்துச்
சிங்காரித்து ரட்சித்து.
மோட்சானந்தத்துக்கும்
நேராக்கியருளும்.

Barth. Crasselius. † 1724.