1. இயேசு ஜெயிக்கிறார், அவர் கர்த்தா,
எங்கள் பகைஞரே, நீங்கள் எல்லாம்
தத்தளித்தோடுங்கள், களிகூர்ந்த
சீயோனுக்கவரால் பூரிப்புண்டாம்;
அவரால் ஜீவனும் நாம் என்றென்றைக்கும்
வாழும் கதியும் நமக்குக் கிடைக்கும்.
2. பயத்தை விட்டுப் பராபரனைத்
திடனாய் நம்புங்கள்; நோவை எல்லாம்
இயேசு அகற்றி, வியாகுலத்தை
நீக்கிடும் உன்னத அரசராம்;
அவரால் எந்தக் கசப்புந் தித்திக்கும்,
ஆத்துமத்துக்கு நற்சீரும் பலிக்கும்.
3. தேவ மிலாறின் அடிகளை நாம்
பொறுமையாகச் சகிக்கத் தரும்,
அதற்கு நமக்கு வேண்டியதாம்
பலம், நாம் ஸ்வாமியைக் கேட்டால், வரும்.
பாடு வந்தாலும், எந்நாளும் நிற்காது;
இயேசுவின் ஆதரவோ நீங்கிடாது.
4. சீயோனே, வெகுநாள் அழுத நீ
உனது துக்கத்தை விட்டுவிடு;
சூரியன் மா களிப்பாக இனி
உனக்குதிக்கும், சந்தோஷித்திரு.
இயேசுவினாலே உன் துயரம் ஆரும்,
அவரால் அது மகிழ்ச்சியாய் மாறும்.
5. "யாவரும் என்னண்டை வாருங்களேன்,
நீங்கள் வேறெங்கும் அலைய வேண்டாம்,
தேவையாம் நன்மையை நான் தருவேன்,
தகமுல்லோருக்கு வேண்டியதாம்
ஜீவ தண்ணீர் இங்குண்டே," என்றன்பாக
கூறின இயேசுவைப் பற்றுவோமாக.
6. நன்றாய்ப் போர் செய்து ஜெயிப்பவர்க்கே
கர்த்தர் கொடுக்கும் கிரீடத்தை நாம்
நோக்குவோமாக, பலன் பெரிதே.
மா பலனானவர் ஆண்டவர்தாம்
என்பதையே நாம் சிந்தித்து நன்றாகத்
தைரியம் கொண்டு போராடுவோமாக.
7. மகிமையான இம்மானுவேலே,
வென்றவர் நித்திய பூரிப்புடன்
உம்மையே தோத்திரம் பண்ணிக்கொண்டே,
தாங்கள் ஜெயித்த ஜெயத்தின் பலன்
தங்களுக்கும்மால், உண்டாயிற்றென்பார்கள்,
உமது பாதத்தை முத்தி செய்வார்கள்,
8. உமக்கும் நர தயாபரராம்
ஆண்டவருக்குந் தேவாவிக்குமே
மேன்மை புகழ்ச்சி கனமுமெல்லாம்
வரக்கடவது, நானும் இங்கே
உம்மைப் பணிகிறேன்; ஆ, தயவாக
என்னையும் மோட்சவானாக்குவீராக.
J.L.K. Allendorf, † 1773.