1. பராபரனே, உமது
ராஜாசனத்தினண்டைக்குப்
பணிந்து தாழ்மையாய் வரும்
இப்பாவியைத் தள்ளாதேயும்.
2. பிதாவே, என்னைத் தேவரீர்
தெய்வீக ரூபாய்ச் சிஸ்டித்தீர்;
நீர் தான் என்ஜீவன்; உம்மையே
அல்லாமல் நான் அழிவேனே.
3. நான் சாவுக்குச் சாண்தூரமாய்
இருந்தபோதெல்லாம் அன்பாய்
உண்டான மோசங்களை நீர்
விலக்கிப் போட்டிருக்கிறீர்.
4. என் ஆத்துமத்தை உமது
மன்னாவினாலே போஷித்து,
என் ஏழை தேகத்தையும் நீர்
தினம் பராமரிக்கிறீர்.
5. திவ்விய மைந்தனே, உம்மால்
நான் மீட்கப்பட்டேன், ஏனென்றால்
அடியேன் தப்ப, தேவரீர்
பலியாய் ஜீவன் விட்டீர்.
6. என் மனச்சாட்சியோடு பேய்
என் குற்றத்தைப்பாராட்டவே,
என் மத்தியஸ்தனாக நீர்
மன்னித்தலை உண்டாக்குவீர்.
7. நீர் எனக்கு ஆசாரியர்,
என் ஆறுதல், என் ரட்சகர்;
நான்மோட்சத்தைப்பெருங்க்கதி
நீர் உத்தரித்ததின் கனி.
8. தேவாவியே, என் நெஞ்சை நீர்
திருப்பிப் புதிதாக்குவீர்;
என்னென்ன நன்மை என்னிலே
உண்டோ, உம்மாலேதான் உண்டே.
9. உம்மால் கர்த்தாவை அறிவேன்
உம்மால் பிதாவே என்கிறேன்,
நீர் என்னைச் சத்தியத்திலே
முடியப் பாதுகாப்பீரே.
10. நீர் சோதனையில் தாங்குவீர்,
உபத்திரவத்தில் கைவிடீர்;
உம்மால் திடனும் வெற்றியும்
மன மகிழ்ச்சியும் வரும்.
11. ஆகையினாலே உமது
மகா பெரிய அன்புக்கு
இப்போதுஞ் சாதாகாலமும்
தோத்திரமே உண்டாகவும்.
12. இந்நாளிலும் என் பேரிலும்
என் வீட்டார் நேசர்மேலேயும்,
கர்த்தாவே, நீர் உம்முடைய
கரங்களை வைத்தருள.
13. நான் சுத்ததெய்வப்பக்தியாய்
நடக்க உமக்கு முன்பாய்
என் கிறிஸ்து மார்க்கம் மாயமும்
கறையுமற் றிருக்கவும்.
14. என் பாவங்கள் கடனையே
அன்பாய் மன்னியும், கர்த்தரே
என் விசுவாசம் நேசமும்
உம்மால் மென்மேல் வளரவும்.
15. நன் மரணத்தை அருளும்,
அடியேன் அங்கே என்றைக்கும்
கர்த்தாவே, உம்மைப் பார்க்கவே
என் வேண்டுதலைக் கேட்பீரே.
Bodo von Hodenberg, † 1650.