1. மகா இரக்கமான
தயாபரா, இப்போ
கழிந்து போன தான
இராவில் நீர் அல்லோ
அடியேனைக் கேடறக்
காத்தீரே; இதற்கே
துதி செலுத்திவார
எழும்பெண் ஆவியே.
2. நான் முழு மனத்தாலும்,
கர்த்தாவே, உம்மையே
துதிக்கிறேன், இந்நாளும்
நீர் நல்வழியிலே
அடியேனை நடத்தும்,
நீர் சித்தமாம்படி
என் வேண்டுதல் வரட்டும்;
நீர் என் அதிபதி.
3. நான் செவ்வையாய் நடந்து
பொல்லாப்பை விலக.
நீரே கைலாகைத் தந்து
காத்துப் பேயுடைய
சதிகளை அகற்றும்;
பலவீனத்திலே
என் ஆவியைத் திடத்தும்,
அன்புள்ள கர்த்தரே.
4. உமதொரே பேறான
குமாரன் தேடின
பரகதியைக் காண
நீர் என்னில் நாட்டிய
என் விசுவாசத்துக்கு
வளர்ச்சியைக் கொடும்,
என் அக்ரமங்களுக்கு
மன்னிப்பை அருளும்.
5. தேவாவியால் மெய்யாக
ரட்சிப்பின் நம்பிக்கை
என் ஆவிக்கு உண்டாக,
நீர் தெய்வ நேசத்தை
எனது நெஞ்சில் ஊற்றிப்
பிறரை நேசிக்கும்
தயையை அதில் மூட்டி
மென்மேல் வளர்ப்பியும்.
6. தினம் நான் உமக்கேற்க
நடந்து, உமது
சொல் சாவு மட்டுங் கேட்க
துணை செய்தெனக்கு
உண்டானதைத் தற்காரும்;
அடுத்தவரையும்
இரக்கத்தோடே பாரும்
காப்பாற்றியாருளும்.
7. ஆ, இயேசுவே, எந்நாளும்
நீர் செய்த தயவு
என்னாலே ஒருகாலும்
சொல்லத் தீராதது;
மா மீட்பரான நீரே
என் பரம மன்னா,
ஆ என்னைத் தேவரீரே
எப்போதும் போஷிக்க.
8. மகத்துவமுள்ளோரே,
நர தயாபரா,
அடியாரை அன்போடே
நோக்கி உம்முடைய
முகத்தின் ஒளியாலும்,
எச்சோதனையையும்
ஜெயிக்கும் பலத்தாலும்
ஆசீர்வதிக்கவும்.
Joh. Kolrose, † 1558.