220. விடியற்காலமான இப்போ திரும்பவும்

1. விடியற்காலமான
இப்போ திரும்பவும்
வெளிச்சத்தை நான் காண,
எல்லாப் பொல்லாப்பையும்
அடியேனை விட்டோட்டி
ரட்சித்தீர்; இதற்கே
கர்த்தாவே, உம்மைப் போற்றி
துதித்தல் ஞாயமே.

2. ஆ, இஸ்ரவேலைக் காக்கும்
கர்த்தாவே, இன்றைக்கும்
நீர் என்னை அன்பாய்ப் பார்க்கும்
தகப்பனாயிரும்;
துரைகளைத் தற்காரும்.
சபையனைத்தையும்
இரக்கமாகப் பாரும்,
அடியாரோடிரும்.

3. சரீர அவதிக்கும்
இரங்கியருளும்.
இக்கட்டனுபவிக்கும்
ஜனத்தை ரட்சியும்.
மெய்க்கிறிஸ்தவர்கள் நாடும்
அமர்ந்த ஜீவனம்
உண்டாகப் பார்த்து வாரும்,
அதுமது வரம்.

4. அவனவன்சீருள்ள
சுத்தாங்க மார்க்கத்தில்
நடந்து, தனக்குள்ள
தொழிலைச் செய்வதில்
பாட்டாளியாய் உழைத்து,
தன் பக்தி யாவையும்
நீர் சொன்ன சொள் மேல்வைத்து,
சுகித்திருக்கவும்.

5. தெய்வீக மகிமைக்கும்
சபைக்குமானதைத்
தடுக்கப் பேய் என்றைக்கும்
பண்ணும் ஆலோசனை
எல்லாம் வீணாகச் செய்யும்;
ஆண்டோர் நீர், இயேசுவே,
சபைக் கெந்நாளிலேயும்
நீர்தான் துணையாமே.

6. நீர், தேவத்ராட்சையான
செடியும், அதிலே
அடியார் பியிரான
கொடிகளுமாமே;
நாங்கள் உம்மில் தரித்துக்
கனி தந்தோங்கவும்
தேவாவியை அளித்துத்
துணை செய்தருளும்.

Joh. Muhlmann, † 1613.