1. பகலது வெளிச்சம் அஸ்தமித்தது
மறைந்தது, எல்லாரும் வேலைவிட்டு
குளிர்ச்சியை அடைகிறதற்க்குப்
போகிறார்கள், இருட்டு வந்தது.
2. இரவையும் பகலையும் சிஷ்டித்த
கர்த்தாவே, நீர் இன்றென்னை ஆதரித்த
விசேஷித்த இரக்கத்திற் கெல்லாம்
தோத்திரஞ் செலுத்தலே ஞாயமாம்.
3. இந்நாளிலே என் மனமும்மை விட்டு
விலகிற்றேயானால், அன்பாய் மன்னித்து,
என் குற்றத்தைக் குலைத்து, என்னிலே
புதிய சீர் உண்டாக்கும், கர்த்தரே.
4. மா ஏழையாம் என் ஆவிக்கிவ்விருண்ட
இராவிலே நீர் உமது குளிர்ந்த
முகத்தினால் வெளிச்சம் காண்பியும்,
என் தேகமுஞ் சுகமாய்த் தூங்கவும்.
5. என்னண்டையில் நற்றூதர் காவலாக
இருந்தென்னைத் தீமைக்கு நீங்கலாக
மறைத்தென்னைப் பிசாசின் சூதுக்கும்
விலக்கமாய்க் காப்பாற்றக் கற்பியும்.
6. என் சாவின் நீடிய ராக்காலம் வரும்
அந்நேரம் நான் உம்மை மனமாரவும்
சார்ந்தாறுதகள் அடைய, என்னை நீர்
இரக்கமாய்க் கண்ணோக்கக் கடவீர்.
7. சன்மார்க்கர்மேல் அனந்த ஜோதியான
அந்நாள் இனி உதிக்கையில், மண்ணான
அடியேனை எழுப்பி, என்றைக்கும்
உம்மண்டையில் நீர் தங்கப்பண்ணவும்.
Berlin, 1647.