228. மெய்ப்பொழுதான கிறிஸ்துவே

1. மெய்ப்பொழுதான கிறிஸ்துவே,
நீர் அஸ்தமிப்பதில்லையே;
அடியாருக் கெந்நேரமும்
வெளிச்சங் காண்பித்தருளும்.

2. பொல்லாத விக்கினங்களை
விலக்கிப் போட்டாடியாரை
நீர் இந்த ராத்திரியிலே
அன்பாய்க்காப்பாற்றும், கர்த்தரே.

3. ஆகாத பாவத்தூக்கும்
பிசாசின் சர்ப்பனைகளும்
விலகப்பண்ணி, உள்ளிலே
சுத்தாங்கம் தாரும், இயேசுவே.

4. அடியார் தூங்குகையிலே,
அடியார் நெஞ்சும்முடனே
சஞ்சாரம் பண்ண அதை நீர்
எழுப்பி வரக்கடவீர்.

5. ஆ உமது சபையையும்
இரக்கமாய்க் காத்தருளும்,
நீர்பாட்ட வாதையைப்பார்த்தே
அதற்குதவும் கர்த்தரே.

6. நோவால் தவிப்பவரும்
அனுக்ரகத்தைக் காண்பித்து
நொறுங்கிய எல்லாரையும்
அன்பாகத் தேற்றியருளும்.

7. பிதா, குமாரன், ஆவிக்கும்
துதியும் தோத்திரங்களும்
அனந்த காலங்களுக்கு
உண்டாகவே கடவது.

Latin Hymn, 6th century
Wittenberg, 1526