1. ஆ, மறுமைக்குப் பின்னையும்
நான் கிட்டி வந்ததாலே
நான் உம்மைப்போற்றி, இப்போதும்
புதிய வாஞ்சையாலே
உம்மண்டைக்கு வந்தேன், நீரே
எக்கிருபைக்கும் ஊற்றாமே,
என் ஜீவனும் நீர் தாமே
2. என் ஜீவனே, எப்போதென்னில்
சாவுக்குள்ளாயிருக்கும்
என் தேகஞ் செத்தும்மண்டையில்,
சாகாமையை உடுக்கும்;
அதாகப்போகும் காலமும்
வேளையுமோ எப்போ வரும்
என்றேங்குகின்றேன், தேவா.
3. நீர் என்னிலும் நான் உம்மிலும்
இருக்கும்படியாக
நான் நேசக்கட்டால் என்றைக்கும்
உம்மோடே ஐக்யமாக
இணைக்கப்பட்ட போதிலும்
அதிகமாய் எந்நேரமும்
நான் உம்மைப் பற்றிக்கொள்வேன்.
4. எப்போ நீர் என்னை உம்மிடம்
சேர்ப்பீர் என்றாசையாக
இருக்கிற அடியேனைச்
சந்தோஷிப்பிப்பீராக.
வெளிப்படும், ஆ, வாருமேன்,
இதோ, நான் ஆயத்தப்பட்டேன்,
அரையைக் கட்டிக்கொண்டேன்.
5. தீவட்டியை நான் ஜோடித்தேன்,
உம்மைச் சந்திக்க வர
அதைப் பிடித்திருக்கிறேன்.
இதோ, குறைச்சலற
தேவாவி தந்த எண்ணெயால்
நிரப்பப்பட்டேன், ஆகையால்
அது நன்றாய் எரியும்.
6. வாருமேன் , இதும்முடைய
மனைவி வாஞ்சையாகப்
பண்ணுஞ் ஜெபம், அதை மகா
அன்பாய் நீர் கேட்பீராக.
வாரும், என் மணவாளனே,
என்பேரில் பட்சம் வைத்தீரே,
நீர் என்னைச் சேர்த்துக் கொள்ளும்.
7. இதற்குத் தக்க வேளையைக்
குறிக்கிறவர் நீரே,
ஆனாலும் என் விண்ணப்பத்தை
விருப்பமாய்க் கேட்பீரே;
நான் உம்மை நித்தம் ஊக்கமாய்
என் நெஞ்சில் வாஞ்சிக்காதோனாய்
இருக்கமாட்டேன், ஸ்வாமி.
8. எனக்கும் உமக்கும் இனி
பிரிதல் உண்டாகாது;
நான் உம்முடைய மனைவி,
என் வாழ்வு முடியாது;
உம்மோடே என்னை விண்ணிலே
நீர் சேர்ப்பீர், மணவாளனே,
என் பொக்கிஷம் நீர்தானே.
9. இதுவரைக்கும் என்னை நீர்
காப்பாற்றின தற்காகத்
துதிக்கப்படக் கடவீர்;
இப்போதுந் திடனாக
அப்பால் என் பயணத்திலே
புது எருசலேமுக்கே
நேராய் நடந்து போவேன்.
10. என்சை நெகிழ்ந்து முழங்கால்
தளரும் போதன்பாக
என் விசுவாசத்துக்கும்மால்
பலம் வருவதாக;
அப்போ நான் புது ஊக்கமாய்
மோட்சானந்தத்துக்கு நேராய்
நடந்து ஏறிப் போவேன்.
11. என் நெஞ்சே, பயமற்றிரு;
நீ விசுவாசத்தாலே
பலத்து, உன்னை உலகிலே
தன் இச்சைகளினாலே
வா என்றழைத்தால், பின்னையும்
நீ இயேசுவுக்கு முழுதும்
ஆதீனமாவாயாக.
12. என் ஆத்துமம், ஆ, இயேசுவே.
அப்போதே உம்மண்டைக்குப்
பறந்தெழும்பிப் போயிற்றே,
நான் இனி மறுமைக்கு
அடுத்தவன், இவ்வுலகு
என் தலம் அல்ல, இம்மைக்கு
இனி நான் பரதேசி.
A.H. Francke, † 1727.