235. நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே

1. நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே,
கண்மூடு, கண்ணே, நீ
உனக்குப் பயமில்லையே,
கர்த்தாவின் கண்மணி.

2. பிதாவுனக்கு வானத்தில்
உண்டவர் சிஷ்டிகர்;
மா ஸ்வாமி உன்னைக் காக்கையில்
யார் தீமை செய்பவர்.?

3. குமாரன் உன்னை ரட்சிக்க
குழந்தையாய் வந்தார்;
நீ என்றும் மகிமை பெற
தாம் மாமிசமானார்.

4. அவரோடவர் தூதரும்
இரங்கி, அவர்போல்
படுக்கும் பிள்ளை யாவையும்
சூழ்வார்கள், சுவர்போல்.

5. அவர் செந்நீரால் கொண்ட நீ
பிதாவின் வசமாய்
வளர உன் பெற்றோர் இனி
பார்ப்பார்கள், கருத்தாய்.

6. தெய்வாவி உன்மேல் தங்கவும்
உன் சிறுவயதிலே
உன்னை நடத்தி, என்றைக்கும்
காப்பாற்றி வரவே.

7. நீ சாய்ந்து தூங்கு, பிள்ளையே,  
பின்னாலே நீயும் போய்
ஆவியில் பலங்கொள்ளவே,
இப்போ அஞ்சாமல் ஓய்.

Joh.Mathesius, † 1565.