247. கர்தரைத் துதி, என் ஆத்துமாவே

1. கர்தரைத் துதி, என் ஆத்துமாவே,
நான் சாகுமட்டும் போற்றுவேன்
ஜீவனின் நாட்கள் எல்லாம், கர்த்தாவே
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
சரீரம் ஜீவன் தந்தவர்
என்றும் துதிக்கப்பட்டவர்.
அல்லேலூய' ;:

2. அரசர் ஸ்த்ரீயினாலே பிறந்த
நரர்தான் மண் ஆவார்களே
அவர்கள் யோசனையோ இறந்த
தினத்தில் வீணாய்ப் போகுமே;
நரர் ஒத்தாசை விருதா,
எங்கள் சகாயர் நீர் கர்த்தா
அல்லேலூயா. ;:

3. இயேசுவின் ஐக்கியத்தில் நிலை நின்று
யாக்கோபின் தேவனைத் தானே
தனக்கடைக்கலமாய்த் தெரிந்து
கொண்டவன் மெய்ப்பாக்கியனே
இக்கர்த்தர் பேரில் நம்பினோன்,
ஞானமும் பலமும் பெற்றோன்,
அல்லேலூயா. ;:

4. பூமி சமுத்திரம் வானத்தையும்
எவ்வாஸ்துவையும் சிஷ்டித்தார்.
வாக்குக் கொடுத்த எல்லாவற்றையும்
மெய்யாக நிறைவேற்றுவார்
எல்லாவற்றிற்கும் ஆண்டவர்
நமக்கும் உண்மையுள்ளவர்
அல்லேலூயா. ;:

5. துன்பங்கள் அவநியாயத்தையும்
சகிப்போரைத் தற்காக்கிறார்.
ஏழைகளின் பசி தாகத்தையும்
குறைவில்லாமல் தீர்க்கிறார்
கட்டுண்டோரை அவிழ்க்கிறார்,
பல இரக்கம் காட்டுவார்.
அல்லேலூயா. ;:

6. குருடர்கள் கண்களைத் தாம் திறந்து
செவிடர் கேட்கப் பண்ணுவார்.
பலமற்றோருக்குக் கையைத் தந்து
எல்லாரையும் சிநேகிப்பார்.
திக்கற்ற பிள்ளை விதவை
யாவர்க்கும் அவரே துணை
அல்லேலூயா. ;:

7. அக்ரமக்காரர் பின் வாங்குவார்கள்,
அவர்களைக் கவிழ்க்கிறார்.
சொந்த வலையில் சிக்குவார்கள்,
கர்த்தர் காலங்கடிக்கிறார்,
சியோனின் ராஜா தேவரீர்
எங்களை என்றும் காக்கிறீர்.
அல்லேலூயா. ;:

8. ஆண்டவர் அற்புதம் செய்வதற்குச்
சமர்த்தர், அவர் என்றைக்கும்
புகழுக்கேற்றவர் என்பதற்கு
எல்லோரும் ஆமென் என்கவும்.
பிதா குமாரன் ஆவிக்கும்
துதி புகழ் உண்டாகவும்
அல்லேலூயா. ;:

J.D. Herrnschmidt, † 1723