1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,
என் ஆவியே, என் உள்ளமே
தேவன்பை நீ கொண்டாடு,
அதை மறக்கலாகாதே;
உன் பாவத்தை மன்னித்தார்,
என் கேட்டை நீக்கினார்,
உன் ப்ராணனை ரட்சித்தார்,
குணம் அளிக்கிறார்.
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்,
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.
2. தாம் ஆளும் ஞாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார்,
உருக்க தயவாலே
நிறையப்பட்டிருக்கிறார்.
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார்; மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும்;
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
எம் பாவம் போயிற்று.
3. தன் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருக்கிறங்குவார்
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்,
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார்;
நாம் புல்லைப்போல் வளர்ந்து,
பூப்போலே பூக்கிறோம்;
காற்றதின் மேல் கடந்து
போனால், உலர்ந்துபோம்
4. ஆனாலும் நாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தேவ பயமாய்ச்
செய்தோர்மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்,
அவர்கள் நன்மையை
விசாரிக்கச் சமர்த்தர்
பரத்தில் ஆளுவர்.
அனைத்தின் மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர்.
5. உற்சாக வேகமாகப்
பண்செய்யுந் தேவதூதரே,
கர்த்தாவை நேர்த்தியாகத்
துதிப்பதுங்கள் வேலையே,
விண் மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச்சிஷ்டியும், அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வகை வகையுமாக
துதிப்பதாகவே;
கர்த்தாவைப் பக்தியாகத்
துதி, என் ஆவியே.
Johann Gramann, † 1531