1. அதிசயங்களை
எல்லா இடமும் செய்யும்
கார்த்தாவை வாக்கினால்
இருதயத்திலேயும்
துதியுங்கள், அவர்
நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும்
இரக்கஞ் செய்தாரே
2. நர தயாபரர்
முடிய ஆதரித்து
நற் சமாதானத்தால்
மகிழ்ச்சியை அளித்து,
தயையை நமது
மேல் வைத்தெந் நேரமும்
ரட்சித்து, தீமையை
எல்லாம் விலக்கவும்.
3. உன்னதமாகிய
விண் மண்டலத்திலுள்ள
மாறாத உண்மையும்
தயையும் அன்புமுள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்.
Martin Rinckart, † 1649.