256. யாவற்றையும் என் மனது

1. யாவற்றையும் என் மனது
கர்த்தாவுக் கொப்புவிக்கும்,
வரும் இக்கட்டும் எனக்கு
ஆதாயமாய் பலிக்கும்.
விண்ணிலுள்ள அவ்வுன்னத
கர்த்தாவுக்கு நான் பிள்ளை
தாம்தண்டித்தும் ஓர்கோபமும்
அவர்க்கென்பேரில் இல்லை.

2. பிதாவின் நேசம் நிச்சயம்,
அவர் கடலிலேயும்
என்னைப் போட்டாலும், என்மனம்
அச்சோதனையிலேயும்
உறுதியாய்த் திடனுமாய்
நிலைத்தால் அவர் தாமே
திரும்பவும் என் பலமும்
என் ரட்சகருமாமே.

3. என்னாலே நான் உண்டானேனோ,
என்தேகம்  ஆவியாவும்
கர்த்தர் கொடுத்ததல்லவோ;
சுகம் ஊணுந் தாவும்,
என் இந்த்ரியம் அவயவம்
எல்லாம் அவர் ஈவாமே,
ஆ, இத்துணை இரக்கத்தைச்
செய்தோர் அன்புள்ளோராமே.

4. இந்நாள் வரைக்கும் அவரால்
நான் ஆதரிக்கப்பட்டுக்
காப்பாற்றப்பட்டிராவிட்டால்
நான் முந்தியே வேரற்றுப்
போவேனல்லோ; அவர் கையோ
என்னை இந்நாள் மட்டாகக்
காப்பாற்றிற்று; அவருக்குத்
தோத்திரமே உண்டாக.

5. கர்த்தாவின்ஞானமோவெனில்
அனைத்தையுஞ் சீராக
நடத்திக் கொண்டிருக்கையில்
நமக்கு நன்மையாகப்
பலமுறை துக்கங்களைத்
தீர்மானம் பண்ணுகிறார்,
நாம் சீர்ப்பட்ட கசக்கிற
அமிழ்தம் தருகின்றார்.

6. உன் மாமிசம் இச்சிக்கிற
மகிழ்ச்சி உன்னை விட்டுப்
போனால், நீ விசனப்படத்
தொடங்கித் தத்தளித்துக்
கலங்குவாய், வேண்டாம், நன்றாய்
அடங்கத் தேவையாகும்;
அதேனென்றால் உனக்கத்தால்
ப்ரயோசனம் உண்டாகும்.

7. அதே உனக்கு நல்லது
என்றுன்னை ஞானமாகப்
படைத்த உன் பிதாவுக்கு
நீ உன்னைப் பக்தியாக
ஒப்புக்கொடு, அஞ்சாதிரு;
ஓர் கவலையுமற்று
அவரின் மா அன்பாகிய
பராமரிப்பைப் பற்று.

8. கர்த்தாவுக்கேற்ற வேளையில்
உன் ஆபத்து முடியும்,
அப்போ கசப்பால் மனத்தில்
இருந்த நோவவியும்,
பொறுத்திரு நிலைத்திரு,
உன் துக்கமும் உன் பாடும்
உனக்குண்டாம் தீங்குமெல்லாம்
சந்தோஷமாக மாறும்.

9. காற்று மழையின் பின் அல்லோ
பியிர் நன்றாய் விளையும்,
வாங்காத வாழ்வினாலேயோ
நற்சீர் குறைவடையும்.
கசக்கிற மருந்திட
பலம் சுகமும் ஆகும்.
நொறுங்கிய இருதயத்
தாழ்வால் குணம் உண்டாகும்.

10. கர்த்தரோ, நான் உம்முடைய
ஆதீனம், தேவரீரின்
கரத்திலே விழுகிற
அடியேனின் நற்சீரின்
ரூபே வர, உம்முடைய
நற்சித் தத்துக் கொப்பாகச்
செய்தருளும், நான்நோவிலும்
உம்மைத் துதிப்பேனாக.

11. நீர் பாக்கியங்களைத் தந்தால்,
சந்தோஷமாயிருப்பேன்;
நீர் கஸ்திவரப் பண்ணினால்
நான் பிள்ளைபோல் பொறுப்பேன்;
பிழைப்புக்கும் இறப்புக்கும்,
கர்த்தாவே, என்ன திட்டம்
தீர்மானமும் நீர் பண்ணியும்,
அதும்முடைய சித்தம்.

12. நான்காலம் பண்ணப்போகையில்
நீர் என்னைத் தயவாக
இருளாம் பள்ளத்தாக்கினில்
நடத்திக் கொள்வீராக;
நான் உமது புகழ்ச்சிக்கு
என்றுஞ் சங்கீதம் பாடும்
கதிரவ மோட்சானந்த
சுதந்திரத்தைத் தாரும்.

P. Gerhardt, † 1675