1. என் இச்சைக் கேற்கிற வழி
ஆகாதே, அத்தால் தாழ்வேன்
கர்த்தர் நடத்தியபடி
நான்போவேன், அப்போவாழ்வேன்
பிதாவது கரத்துக்கு
நான் கீழ்ப்படிந்திருப்பது
ஆதாயமாய் முடியும்,
2. தயாபரரது கரம்
அனைத்தையும் நன்றாக
நடத்தவே, என் மாமிசம்
அத்தாலே துக்கமாக
இருக்கும்; நானோ அதற்குச்
செவி கொடாதிருப்பது
என்னாலே தீர்ந்த தீர்ப்பு
3. கர்த்தர் நடத்திய விதம்
நன்றானபடியாலே
அதே எனக் கீதமியம்;
உற்சாக மனத்தாலே
பிழைக்கச் சாக எப்படி
நிர்ணைத்தாரோ, நான் அப்படி
சந்தோஷமாயிருப்பேன்.
4. என் யோசனைக்கும் புத்திக்கும்
கர்த்தர் நடத்தும் பாதை
நன்றாய்க் காணாதபோதிலும்,
அவரது கரத்தை
நான் நம்புவேன்; என் பேரிலே
தாம் அன்பை வைத்தபடியே
முடியவும் ரட்சிப்பார்.
5. இக்கட்டிலும் நான் அவரை
நம்பிக்கொண்டே தரிப்பேன்;
பிதாவாம் அவர் என் துணை
நாள் வட்டத்தில் கெலிப்பேன்.
என் மேல்வரும் இக்கட்டெல்லாம்
என் பிரயோசனத்துக்
பொறுமையாயிருப்பேன்.
6. வழி முட்காடானாலும், நான்
கர்த்தர் மா உண்மையாக
எல்லாம் முடிப்பாரென்றுதான்
அறிவேனே, பின்னாகக்
கர்த்தாவுடைய கிரியை
நடத்தப்பட்ட யோசனை
மகிமையாய் விளங்கும்.
Lampertus Gedicke † 1736