1. கர்த்தாவின் சித்தம் நல்லதே,
அந்தபடி ஆகட்டும்,
ஒத்தாசை செய்து வந்தாரே;
இடுக்கமும் இக்கட்டும்
வந்தால், அன்பாய் நற்பக்தியாய்
இருப்பவரைப் பார்ப்பார்;
கர்த்தர் துணைஎன்றவரைச்
சார்ந்தோரை நன்றாய்க்காப்பார்
2. என் ஆறுதல், என் நம்பிக்கை
என் ஜீவன் அவர் தாமே;
என் ஆண்டவரின் ஆளுகை
என் பாக்கியமுமாமே
முறையிடேன்; அடங்குவேன்;
என் மயிர் எண்ணினாரே;
அழுகிற கதியில்லா
நரனைக் கைவிடாரே.
3. நான் சென்றுபோக என் பிதா
குறித்த எந்த நாளும்
என் மனத்திற்குப் பூரண
சந்தோஷத்தோடே தாளும்,
என் ஆவியை நீர் உம்மண்டை
எடுத்துக்கொள்ளுவீரே,
விரோதிக்கும் பிசாசையும்
எத் தீங்கையும் வென்ரீரே.
4. பொல்லாத அந்தச் சத்துரு
வினையுஞ் சூதுமாக
வந்தால், கர்த்தாவே எனக்கு
ஜெயம் அளிப்பீராக,
ஆ, உமது மா தயவு
அடியேனைக் காக்கட்டும்;
தயாபரர் நீர் என் பிதா;
என் ஆவி உம்மைப் பற்றும்.
V. 1-3 Markgraf Albrecht von
Brandenburg, † 1568
V. 4 Nuremberg, † 1554.