264. கர்த்தாவை நம்புவாரை ஒர்க்காலும்

1. கர்த்தாவை நம்புவாரை
ஒர்க்காலும் கைவிடார்
பொல்லாரின் சீறுமாறை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.

2. கர்த்தாவின் சித்தத்துக்குக்
கீழ்ப்பட்டடங்குவேன்;
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்.
கெளகீக வாழ்வின் பாதை
வேண்டாம். நான் இயேசுவைப்
பின்பற்றி, இங்கே வாதை
சகித்தலே மேன்மை.

3. என்மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே.
பொறுக்கிற வரத்தை
நான் அவரைக் கேட்பேன்,
இவ்வாறாயென் இக்கட்டைச்
சகித்து வெல்லுவேன்.

4. கசப்புங் கர்த்தராலே
வரும், நான் பின் வாங்கேன்,
ஜெபத்தில் ஆசையாலே
விண்ணப்பம் பண்ணுவேன்;
அப்போது தயவாகக்
காப்பாரே, கைவிடார்;
இக்கட்டுப் பெரிதாகப்
போம்போது தேற்றுவார்.

5. அநேகர் ஆசைவைக்கும்
திரவியத்துக்கு
ஓடேன், அதென்றென்றைக்கும்
நிலைத்து நிற்காது,
என் பொக்கிஷம் பரத்தில்
இருக்கும் கிறிஸ்துவே.
அவரது வசத்தில்
கதி எல்லாம் உண்டே.

6. என் இயேசுவை நான் பற்றி
இருக்கிறேன், அவர்
என் சாபத்தை அகற்றி
விலக்கும் ரட்சகர்
நான் தப்ப எனக்காக
இரத்தம் சிந்தினார்.
அத்தன்மை உண்மையாக
யார் என்னை நேசிப்பார்.

7. தோத்திரமே செலுத்த
மிகுந்த ஞாயமாம்;
என், ஜீவனைக் கொடுத்த
என் கர்த்தருக்கெல்லாம்
ஆதீனமாவதாக;
அவருக்கென்றைக்கும்
பணிந்த பக்தியாக
நான் கீழ்ப்படியவும்.

8. என் ஏழைப் பாட்டித்தோடே
முடியும்; இயேசுவே,
அடியேனுக் கன்போடே
மோட்சானந்தத்திலே
சுதந்திரம் அளியும்,
அப்போ பிழைக்கிறேன்,
எல்லாவிதக் கதியும்
அடைந்து வாழுவேன்.

Anderas Kessler.