265. சேதமற, யாவும் வர கர்த்தர்

1. சேதமற, யாவும் வர
கர்த்தர் ஆதரிக்கிறார்;
காற்றடித்தும் கொந்தளித்தும்
இயேசுவை நீ பற்றப்பார்.

2. இயேசுபாரார், அவர் காரார்
தூங்குவார் என்றெண்ணாதே;
கலங்காதே, தவிக்காதே,
நம்பினோனை விடாதே.

3. கண்மூடாத உறங்காத
உன் கர்க்த்தாவைப் பற்றி, நீ
அவர்தாமே, காப்பாராமே
என்று அவரைப் பணி.

4. நன்மை வந்தும், அட்டிகண்டும்
நீ பயப்படாதிரு;
உன்னிலுள்ள துக்கமுள்ள
நெஞ்சைத்தேற்றுவார் பொறு.

5. உனக்காக நற்சீராகக்
காரியம் முடியுமே,
பயமற்ற, திடப்பட்ட
மனத்தோ டமர்வாயே

6. உன் அன்பான கர்த்தரான
இயேசுவின் மீலாறை நீ
பகையாமல், வெறுக்காமல்,
முத்திசெய், அதே சரி

7. உன் விசாரம் மா விஸ்தாரம்
ஆகியும், கர்த்தாவுக்கு
நீ கீழ்ப்பட்டு, க்லேசமற்று
அவருக்குக் காத்திரு

8. தேவ கைக்கும் வல்லமைக்கும்
சகலமுங் கூடாதோ,
எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்
அவரால் அறும் அல்லோ.

9. இதற்கான வெகுவான
சாட்சி எங்கும் இல்லையோ;
ஆகையாலே இதனாலே
நம்பிக்கை உண்டாகாதோ.

10. திட்டமான நாள் உண்டான
போதனுக்ரகமெல்லாம்
விரைவாக அன்புமாக
உன் மகிழ்ச்சிக்கே உண்டாம்.

11. உன்மேல் ஏற நீயே தேட
போனதைச் சகிக்கிறாய்;
தெய்வ சித்தம் பண்ணுந்திட்டம்
கஸ்தி என்றேன் அழுவை.

12. சீரில்லாத உன் ஆகாத
மனமுன்னை ஆள்வது
நல்லதல்ல; அதற்கல்ல,
கர்த்தருக்குக் கீழ்ப்படு.

13. கர்த்தர்தாமே ஆண்டோராமே
தங்களைவெறுத்திவர்,
இன்பந் தந்தும், கஸ்திவந்தும்
சம்மதித்தோர் பாக்கியர்,

14. கர்த்தர் தந்த உன்மேல் வந்த
பாரத்தைச் சுமந்திரு.
நீ சலித்தால் நீ பின்னிட்டால்
குற்றம் மா பெரியது.

15. கிறிஸ்துவைப் புறக்கணித்து
சிலுவையை வெறுத்தோர்
வெட்கத்தோடும் திகிலோடும்
இடப்பக்கத்தில் நிற்போர்

16. புத்தி கேட்டு, அதை ஏற்றுக்
கொண்டெடுத்த மனிதர்
இயேசுவாலே க்ரீடத்தாலே
ஜோடிக்கப்படுபவர்.

17. ஆமென், நித்தம் தெய்வசித்தம்
செய்யப்பட யாவையும்
நீர் குறித்து, நீர், கற்பித்து,
நீர் நடத்தியருளும்.

J.D. Herrnschmidt, † 1723.