1. ப்ரயாசைப்பட்டுப் பாரத்தைச்
சுமக்கும் நீங்கள் நம்மண்டை
வந்திவ்விடம் எல்லாரும்
ஒதுங்கி, நம்மிடத்திலே
படியுங்கள், நராட்களே,
அப்போது முசிப்பாறும்.
2. நாம் உங்கள் மேலே வைத்திடும்
எமது நுகத்தடிக்கும்
சுமைக்கும் பாரமில்லை
அதற்குக் கீழ்ப்படிந்தவன்
பிழைப்பான், அவன் பாக்கியன்,
அவன் மரிப்பதில்லை.
3. நாம் போன காலடியிலே
நடந்து தெய்வச் சொல்லுக்கே
எல்லாஞ் சரிபடுத்திச்
செய்வீர்களாக என்பது
திவ்விய மைந்தன் நமக்கு
அன்பாகச் சொன்ன புத்தி.
4. உலகத்தாரும் மோட்சத்தை
விரும்பினாலும், சிலுவை
வேண்டாம்என்றோடுவார்கள்;
மெய்க் கிறிஸ்தவர்களோ அதை
எடுத்துக் கொண்டு கதியை
அடைந்து வாழுவார்கள்.
5. பரத்தின் ராச்சியத்துக்குப்.
போம் ஜீவ பாதை ஆனது
நெருக்கமாயிருக்கும்;
விசாலமாம் வழியிலே
நடக்கும் மனிதரைப் பேய்ப்
பாதாளத்துக் கிழுக்கும்.
6. இன்னொருவன் பலத்தவன்
பின்னாளில் அவன் ரோகஸ்தன்
கருக்காய்ச் சாவினாலும்
சூழுண்டு, பூவைப்போலத்தான்
அறுக்கப்பட்டு வாடுவான்.
பூலோக வாழ்வு மாளும்.
7. சன்மார்க்கராம் பிரியரே,
நெருக்கமாம் வழியிலே
நடந்து கொண்டிருந்து,
எப்போதுந் தெய்வ வார்த்தையில்
நிலையுங்கள் பிற்காலத்தில்
சந்தோஷ வாழ்க்கையுண்டு.
8. துன்மார்க்கர் துன்பம் பண்ணியும்,
சரிக்கட்டாமல், என்றைக்கும்
சன்மார்க்கராயிருங்கள்;
ஆகாத மனிதர்களால்
பல அஞ்ஞாயம் நேரிட்டால்
அன்பாய் மனம் பொறுங்கள்.
9. உபத்திரவம் இம்மையிலே
கசப்பானாலும், நம்மையே;
சீர்கெட்ட லோகத்தார்கள்
மகா மகிழ்ச்சியாய் இப்போது
வாழ்ந்தாலும் தீயிலே அல்லோ
மா வாதைக் குள்ளாவார்கள்.
10. ப்ரயாசப்பட்ட நீங்களோ
பரத்தில் கிறிஸ்துவோடப்போ
வாழ்வனுபவிப்பீர்கள்;
அனந்தமாய்க் கர்த்தாவிடம்
சொல்லுக் கடங்காப் பலனை
அடைந்து கொள்ளுவீர்கள்.
11. தமது திருநாமத்தைக்
கொண்டாணையிட்டுச் சொன்னதைப்
பிசகற மெய்யாகத்
தயாபரர் கொடுப்பாரே;
உன்னதமான அவர்க்கே
துதி உண்டாவதாக.
J. Witzstadt, † 1530.