268. ஏன் சலிப்பேன், கிறிஸ்து நிற்பார்

1. ஏன் சலிப்பேன், கிறிஸ்து நிற்பார்
இவ்விதப் பரம
முத்தை யார் பறிப்பார்.
எனக்கங்கே வைத்திருக்கும்
மோட்சத்தை எவன் கைக்
கொள்ளையிட்டெடுக்கும்.

2. நான் நிர்வாணமாய்ப் பிறந்தேன்,
ஆஸ்தியும் எதுவும்
இன்றி இங்கே வந்தேன்;
மீளவும் நிர்வாணமாவேன்,
ஏனெனில் லோகத்தில்
யாவும் விட்டுச் சாவேன்.

3. ஆஸ்தி ஜீவன் தேகம் ரத்தம்
தம்பிரான் கையில் நான்;
ஈவாய்ப் பெற்ற தத்தம்;
அவர் மீளவும் எடுத்தும்,
பாக்கியம்; என் மனம்
தோத்திரஞ் செலுத்தும்

4. மா சுமை என் முதுகுக்கு
வரவே, நெஞ்சிலே
துக்கம் என்னத்துக்கு;
அதை வரப்பண்ணுங் கர்த்தர்
தயவாய் லேசுமாய்
நீக்கவுஞ் சமர்த்தர்.

5. பல இன்பத்தை இம்மட்டும்
தந்தாரே; வாழிந்தேனே,
துன்பமும் வரட்டும்.
அவர் தண்டனைகள் சாது;
அவர் கை அத்துணைக்
கூர்மையாய் வெட்டாது.

6. சரச நகைப்பைப் பேயும்
லோகமும் காட்டியும்,
வேறே என்ன செய்யும்;
சரசங்களைப் பண்ணட்டும்,
தெய்வக் கை சிறுமை
வந்தபின் உயர்த்தும்.

7. கிறிஸ்தவன் துன்னாளுக்காகப்
பயமும் திகிலும்
அற்றிருப்பானாக;
சாவுக்கும் அஞ்சாதிருக்கும்
வீரமும் ஆண்மையும்
அவனுக்கடுக்கும்.

8. எந்தச் சாவு நம்மைக் கொல்லும்,
சாவெனில் மோட்சத்தில்
நம்மை வரச் சொல்லும்;
சாவில் எந்தத் துன்பத்துக்கும்
தெய்வக் கை ஆவியைத்
தப்புவித் தெடுக்கும்.

9. அங்கே பூரிப்பாய்க் கெலிப்பேன்,
நோவின் பின் வானத்தின்
மேன்மையைத் தரிப்பேன்.
இங்கே மெய்ப்பொருள் காணாது,
உலக வாழ்வான
வேஷங்கள் நில்லாது.

10. சகல பூலோக நன்றும்
மண் அல்லோ; நெஞ்சுக்கோ
துக்கம் உண்டு பண்ணும்;
அங்கே, அங்கே, என்றென்றைக்கும்
உத்தம, இனிய
நன்மைகள் கிடைக்கும்.

11. பரதீசின் எஜமானே,
இப்போதும் என்றைக்கும்
நீர் என் செல்வந்தானே;
உம்முடையோன் நான், நீர் தாமே
எனக்காய்த் தயவாய்
மாண்டமீட்பராமே.

12. என்னுடையோர் நீர், கர்த்தாவே,
உம்மையே நெஞ்சிலே
பற்றிநேன், பத்தாவே.
என்னைச் சாரும்போதன்பாக
மோட்சத்து வாழ்வுக்கு
நீர் அழைப்பீராக.

P.Gerhardt. † 1676.