1. நம்மை ஆண்டவர் கைவிட்டார்
முற்றிலும் புறக்கணித்தார்
என்ற நினைவு வேண்டாம்,
அவர் மெய்ச் சகாயராம்.
2. நாம் பொறுக்கத் தேவையாகும்
அவர்க்கேற்ற நாளில் ஆகும்;
எவன் அவர் பிள்ளையோ,
அவனை ரட்சியாரோ.
3. பிள்ளைக்கு விருப்பமான
காரியத்தை ஏற்றதானா
நல்ல சமயத்திலே
பெற்றார் தருவார்களே
4. அவராலே எந்தத் தீங்கும்
காலம் வந்தபோது நீங்கும்,
அவர் பிள்ளையாகிய
எனக்கு அவர் பிதா.
5. சாத்தான் என்னத்தைச் செய்தாலும்,
எந்தக் கேடு நேரிட்டாலும்,
ஆண்டவர் இருக்கிறார்,
அவர் அதை நீக்குவார்.
6. சாவதின் மிரட்டலுக்கும்
சத்துருக்கள் வர்மத்துக்கும்
பயம் ஏது, கர்த்தரே
என் சிநேகிதராமே.
7. லோகம் என்னை வன்கண்ணாலே
நோக்கினாலும், அதனாலே
திகில் இல்லை, அவரே
ஞாயந் தீர்ப்பவராமே.
8. லோகத்தால் நான் புறம்பாகத்
தள்ளப்பட்டால். அற்பமாக
அதைப் பார்ப்பேன் எனக்கே
மோட்சந் தானிருக்குமே.
9. லோகமே, நல் மனத்தோடே
உன்னை விடுவேன், உன்னோடே
கலவேன், பராபரன்
என்றென்றைக்கும் என் பலன்.
10. ஆ, என் பொக்கிஷம் நீர் தாமே,
கர்த்தரே, அதெனக்காமே,
மற்ற யாவையும் எண்ணேன்,
லோகத்தை வெறுக்கிறேன்.
Christoph Tietze, † 1703.