1. என் ஜீவன் கிறிஸ்துதாமே,
அத்தாலே எனக்கு
என் சாவாதாயமாமே.
நெஞ்சே, மகிழ்ந்திரு.
2. நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே,
மகா மகிழ்ச்சியாகப்
பிரிந்து போவேனே.
3. பாடற்றுபோம், இந்நாளே
என் நோவின் முடிவு,
என் பாவம் இயேசுவாலே
நிவர்த்தியாயிற்று.
4. நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்து போகவே
என் ஆசையைத் தள்ளாமல்
கண்ணோக்கும், கர்த்தரே.
5. ஓர் விளக்கின் கொழுந்து
அவியும் போல் என்னில்
வினா வெல்லாம் அறுந்து
கலைந்து போகையில்.
6. அப்போது நன்றாய் அமைந்து
கலங்கலின்றியே
நான் நித்திரை அடைந்து
தூங்கட்டும் இயேசுவே.
7. நான் உம்மைக் கெட்டியாகப்
பிடித்தும்முடனே
அனந்தப் பூரிப்பாக
வாழட்டும், இயேசுவே.
1608