1. என் இயேசுவே, தயாபரா,
என் மீட்புக்காகச் சகல
உபாதியோடுஞ் சாவையே
அனுபவித்த கர்த்தரே.
2. ஆரோக்கியமில்லாதோனாய்
கிடக்கிற இப்பாவிக்காய்
நீர் பட்ட வாதை நோவையும்
நினைத்திரங்கியருளும்.
3. என் பார்வையும் என் கேள்வியும்
எனது வாயின் சத்தமும்
எல்லாம் இல்லாதே போகையில்
என் மூச்சொடுங்கும்வாதையில்.
4. வீனா கலங்கிப் போகையில்,
நரர் துணை வீணாகையில்,
அப்போ நீர் என் இக்கட்டிலே
சகாயம் பண்ணும், இயேசுவே.
5. அவ்வழுகையின் பள்ளத்தை
நான் விடும்போதென் வாதையைக்
குறுக்கிப்பேயின் சூதையும்
விலகப் பண்ணியருளும்.
6. என் ஆவியை நீர் உமது
வசத்தில் சேர்த்த பிறகு
என் தேகம் எழுமட்டுக்கும்,
குழியில் இளைப்பாறவும்.
7. நான் பூரிப்போடந் நாளிலே;
எழுந்திருக்கக் கர்த்தரே.
நீர் சாபத் தீர்ப்பனைத்துக்கும்,
இவ்வேழையை விலக்கவும்.
8. அதேனெனில் நீர் சொன்னீரே
'மெய்யாகவே, மெய்யாகவே.
யார் நம்மைப் பற்றிக் கொண்டிப்போ
நம் வார்த்தையைக் கைக்கொள்வானோ,
9. அவன் ரட்சிக்கப் படுவான்,
தன் ஆக்கினைக்குத் தப்புவான்,
அவன் தான் மரணத்தையும்
ருசிப்பதில்லை, என்றைக்கும்.
10. சாவவனைக் கொல்லாதே போம்
நாம் அவனை எழுப்புவோம்,
நாம் மோட்ச ராச்சியத்திலே
நம்மோடே வாழ்வான்,' என்றீரே.
11. ஆ, இந்த வார்த்தையின்படி
நீர் தயவாய்ச் செய்தருளி.
அடியேன் பாவம் யாவுக்கும்
மன்னிப்பைக் கட்டளையிடும்.
12. முடிய தெய்வப் பக்தியாய்
மிகுந்த பொறுமையுமாய்
இருக்க, நீர் என் நெஞ்சிலே
திடனைத் தாரும் இயேசுவே.
Paul Ebes, † 1569.