273. நாள் போம் என் சாவுவேளை சேரும்

1. நாள் போம், என் சாவு வேளை சேரும்,
இதெத்தனை சமீபமோ;
என் ஜீவ ஓட்டம் நிறைவேறும்
அவஸ்தை எப்போ காணுமோ,
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

2. நான் காலமே சுகமானாலும்
ராச்சேரும் முன் வேறாகலாம்;
என் காலை எங்கே நான் வைத்தாலும்,
என் ப்ராணனுக்கு மோசமாம்
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

3. குணப்பட ஏன் தாமதிப்பேன்
இப்போ ரட்சிப்பைப் பற்றுவேன்;
தினம் என் முடிவைச் சிந்திப்பேன்,
என் தீபத்தை நான் ஜோடிப்பேன்,
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

4. நான் பயண முஸ்திப்பாய் நித்தம்
இருந்து கொண்டெப் போதைக்கும்;
கர்த்தாவே, உம்முடைய சித்தம்
என்றச் சமற்றுச் சொல்லவும்.
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

5. விண் எனக்குத் தேன்போல் தித்தித்து,
மண் பிச்சைப்போல் கசக்கவும்;
மயக்கங் கண்டால், நீர் நேரிட்டு
என் நெஞ்சை உயரஇழும்,
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

6. ஆ, ஸ்வாமி. கிறிஸ்தின் நீதியாலே
என் பாவழுக்கை மூடுவேன்;
நான் அதை விசுவாசத்தாலே
உடுத்துச் சுத்தமாகிறேன்,
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

7. கர்த்தாவின் காயங்கள் அடியேன்
சுகப்படும் அடைக்கலம்;
மரித்தோர் அவர், நான் மரியேன்,
சரீரச் சாவோ பாக்கியம்,
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

8. என் சாவு ரட்சகரை விட்டு
அடியேனைப் பிரிக்காதே.
நான் அவர் பக்கத்தில் கையிட்டு,
என் ஸ்வாமி என்று சொல்வேனே.
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

9. என் ஞானஸ்நானத்தில் முன் தானும்
நான் இயேசுவை அணிந்தவன்,
இந்நாலும் தெய்வ அன்பைக் காணும்,
நான் உம்முடைய புத்திரன்,
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

10. நான் அவர் மாமிசத்தை உண்டு,
நான் அவர் ரத்தஞ் சாப்பிட்டேன்,
நான் உமதன்பைப் பெற்றிருந்து,
அவருக்குள் தரிக்கிறேன்.
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

11. என் ஜீவன் இன்றைக்குப் போனாலும்,
என் மீட்பரால் நான் பாக்கியன்;
என் காலம் நாளைக்கு வந்தாலும்,
நான் அவர்க்குள் இருப்பவன்.
ஆ, கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனாக, கர்த்தரே.

12. அடியேனை நீர் இங்கே வைக்கும்
நாள் மட்டும் என்னை உமக்கே
சித்தமாகும் போல் என்றென்றைக்கும்
நடத்தும்; கடைசியிலே
நான் கிறிஸ்துவின் ஒதுக்கிலே
மரிப்பேனே என் கர்த்தரே.

Aemilie Juliane,
Countess of Schwarzburg-Rudolstadt, † 1706.