274. நாள் வேகமாய்க் கழியுமே

1. நாள் வேகமாய்க் கழியுமே,
நாம் மறுமைக்குப் போவோமே,
ஆனாலுஞ் சாவை மனிதர்
அவரவர்
நன்றாய் நினைக்க அசடர்.

2. நீர்க் குமிழி கானாவுக்கும்
ஒப்பாய்ச் சுகமும் ஜீவனும்
ஓர் நிமிஷத்தில் போகாதோ,
ஆவியாதோ,
தினம் அதை நாம் காணோமோ.

3. நீரோ, யென் கர்த்தரே, 'மாறீர்'
எனக்கென்றைக்கும் இருப்பீர்.
உள்ளதெல்லாம் போகட்டுமே
பயப்படேன்.
கர்த்தாவாம் உம்மைப் பற்றினேன்.

4. ஆ, இயேசுவே; என் முடிவைத்
தினம் நினைக்கும் புத்தியை
நான் உம்மால் தான் அடையவும்
விழிக்கவும்
சகாயம் பண்ணியருளும்.

5. கடை இக்கட்டிலும் லோகமும்
லௌகீக வாழ்வும் இச்சையும்
உதவுமோ, மனிதனே,
பாழாகுமே
அழியா நன்மை தேவையே,

6. ஆகாத மாயையே, நீ போ,
நீ சாரமற்ற தல்லவோ,
என் ஆவி தேடும் பாக்கியம்
மெய்ப் பாக்கியம்,
இயேசு நீர் தான் என் பொக்கிஷம்.

7. நான் உம்மை அங்கே மோட்சத்தில்
என் கண்களாலே காண்கையில்
அப்போ நான் பாக்கியனாமே,
ஆ, இயேசுவே,
அதற்கொத்தாசை செய்வீரே.

Joachim Neander. † 1680.